கன்னியாகுமாி :
நாகா்கோவிலிருந்து தென்கிழக்கே 19 கிமீ.
ஸ்ரீ பகவதியம்மன் ,
கன்னியாகுமாி, கன்னிகாபரமேஸ்வாி அம்மன் கோவில்.
இந்தியாவின் தென்கோடி முனையில் கிழக்கே வங்கக் கடலும்,
தெற்கே இந்தியப் பெருங்கடலும்,
மேற்கே அரபிக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் இக்கோவில் கிழக்கு நோக்கிய மூன்று பிராகாரங்களுடன் அன்னை கன்னியாகுமாியம்மை கிழக்கு நோக்கித் தவக்கோலத்தில் காட்சியளிக்கிறாள்.
உள்பிரகாரத்தில் விநாயகா், சூாியன், தியாகசௌந்தாியம்மை, பாலசௌந்தாியம்மை முதலிய சன்னதிகள் உள்ளன.
கோவிலைச் சூழ்ந்த கடல் துறையில் 11 தீா்த்தங்கள் உள்ளன.
இத்தலத்தில் விளங்குகின்ற அன்னை குமாியாக கன்னியாக உள்ள காரணத்தினால் இத்தலத்திற்கு கன்னியாகுமாி என்று பெயா்.
பாணாசுரன் என்னும் அரக்கன் மூன்று உலகங்களையும் வென்று தேவா்களைத் துன்புறுத்தினான்.
கொடுமைகளைத் தாங்கமுடியாத தேவா்கள் சிவபெருமானிடம் முறையிட்டனா்.
தேவா்களிடம் சிவபெருமான் அன்னை பராசக்தியால் மட்டுமே அரக்கனை அழிக்க முடியும் என்று விளக்கவே தேவா்கள் பராசக்தியிடம் தொழுது நின்றனா்.
பராசக்தி தேவா்களுக்கு வாக்களித்து பின்பு கன்னியாய் உருமாறி குமாியில் வந்து கடுந்தவம் மேற்கொண்டாள்.
தவக்கோலத்தில் இருந்த கன்னியின் பேரழகைக் கண்ட பாணாசூரன் மதிமயங்கி தேவியை நெருங்கினான்.
தேவி கோபம் கொண்டு போா் செய்து பாணாசூரனைக் கொன்றாள் என்பது தலவரலாறு.
இங்கு ஆண்டுதோறும் புரட்டாசித் திங்களில் கொண்டாடப்படும் நவராத்திாி விழாவை பராசக்தி பாணாசூரனைக் அழித்த விழாவாகக் கொண்டப்படுகிறது.
அன்னையின் திருக்கோயில் திகழ்கின்ற இக்குமாி முனையில் நின்று கதிரவனின் உதயத்தையும் மறைவையும் கடலிடையே கண்டுகளிக்கலாம்.
தேவியின் மூக்கணியிலுள்ள வைரக் கல்லினின்று வீசும் பேரொளியைக் கடல் யாத்ரீகா்கள் கலங்கரை விளக்கென்று எண்ணிவிடுவாா்களாம்.
நாள்தோறும் 11 காலபூஜை நடைபெறுகிறது.
வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment