குல்ஃபி ..
கோடைக்காலம் வந்துவிட்டது. ஐஸ்கீரிம், ஜூஸ், குல்பி போன்றவற்றை தான் குழந்தைகள் அதிகம் விரும்புவர்.
அவர்களுக்கு கடைகளுக்கு வாங்காமல் வீட்டிலேயே சுவையான குல்பி எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை:
சர்க்கரை - 50 கிராம்
கஸ்டர்டு பவுடர் (இல்லையென்றால் கார்ன்ஃப்ளோர்) - 3 தேக்கரண்டி
ஏலக்காய்ப்பொடி - 1 தேக்கரண்டி.
முந்திரி+பாதாம் - 100 கிராம்.
குங்குமப்பூ-பாதாம் எசன்ஸ் - 5 துளிகள்
பனைவெல்லம் (அல்லது) வெல்லம் - எலுமிச்சைஅளவு.
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் மிதமான சூட்டில், பால் 600 மில்லியாக குறையும் வாரை காய்ச்சவும். அதில், சர்க்கரையை போட்டு கரையும் வரை காய்ச்சவும். அதன்பின் வெல்லம் போட்டு கிளறவும்.
கஸ்டர்டு பவுடரை கால் கிண்ணம், குளிர்ந்த நீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைத்து கொள்ளவும். இந்த கலவையை பாலில் ஊற்றி கைவிடாமல் கிளறிகொண்டே இருக்கவும். அதன்பின், ஏலக்காய்ப்பொடி, எசன்ஸ் சேர்க்கவும்.
ஆரியதும், அதனை Freezer ல் வைக்கவும். நன்றாக கட்டியானதும் ஐஸ்கீரிமை எடுத்து மிக்சியில் போட்டு நுரைத்து வரும் வரை அரைத்து கொள்ளவும். பொடித்த பாதாம்-முந்திரி ஐஸ்கிரீம் கலவையில் சேர்த்து குல்ஃபி கப்பில் ஊற்றி freezerல் வைத்து தேவையான போது பரிமாறலாம்.
No comments:
Post a Comment