Monday, April 18, 2022

பூரிமசாலுக்குஆசைப்பட்டகதை

 முகநூல்...

இன்று காலை....

''உஷா...

காலைல 11.00 மணிக்கு சாப்டறமாதிரி  பூரி மசால் ரெடி பண்ணீரு.

பழைய சாதம் வேற இருக்கு .

பூரி மசால், தயிர் சாதமா சாப்ட்ருவோம். நைட்டுக்கு சூடா சமையல் பண்ணிக்கலாம்.

சரிங்க...

வெங்காயம், உருளைகிழங்கு வாங்கிண்டு வாங்கோ."

வாங்கி வந்தாகி விட்டது.

''ஏங்க, நான் வெங்காயம் உரிக்றதுக்குள்ள பூரிக்கு மாவு பிசைஞ்சுருங்களேன்..."

பிசைந்தாகி விட்டது.

''ஏங்க, பூரி நான் தேய்க்றதுக்குள்ள இந்த வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய் நறுக்கிருங்கோ..

அப்பிடியே உருளைகிழங்கை குக்கர்ல வேகவச்சுருங்கோ."

உருளையை குக்கர்ல போட்டு, காய்களை நறுக்கியாகிவிட்டது.

''ஏங்க... அந்த உருளைகிழங்கை தோல் உரிச்சுருங்களேன்."

உரித்தாகிவிட்டது.

''ஏங்க ..

வாணலில கடுகு , பச்சைமிளகா, இஞ்சி , கருவப்பில்{கருவேப்பிலை}போட்டு தாளிச்சு வெங்காயத்தை வதக்கி தண்ணி ஊத்தி வேக விடுங்கோ.. அதுக்குள்ள நான் பூரியை தேச்சுட்டு வந்துர்றேன்."

ஆச்சு.

''ஏங்க...

அந்த மசிச்ச உருளைகிழங்கை அதுல போட்டு கொதிவாங்கிருங்கோ. இப்ப வந்துர்றேன்."

உருளையை போட்டு கொதிவாங்கி மசால் இறக்கி வச்சாச்சு.

''இந்தாங்கோ...

பூரியை மட்டும் நீங்க பொரிச்சுருங்கோ. நீங்க பொரிச்சாதான் அது நல்லா பொரிஞ்சு வர்றதில்லாம, அப்பிடியே ''புப்"னு குண்டா நிக்கறது. நான் பொரிச்சா அப்பளமா வர்றது."

பூரியையும் பொரிச்சாச்சு.

''நான் ஆத்தங்கரைலபோய் துணி தோச்சு., குளிச்சுட்டு வந்துர்றேன். அந்த பழைய சாதத்தை தயிர் விட்டு பிசைஞ்சுறுங்கோ.

பாலாடையை போட்டு பிசைஞ்சுறாதேள்...

அது நெய் காச்சறதுக்கு சேக்கரேன்."

தயிர் சாதம் பிசைஞ்சாச்சு.

குறிப்பு..

அம்மணி தேய்ச்ச மொத்த பூரியோட எண்ணிக்கை பத்து. 

#வேலையில்லாதஓர்குடும்பஸ்தன் பூரிமசாலுக்குஆசைப்பட்டகதை.

No comments:

Post a Comment