ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்"-பெரியவா
("சாஸ்திரிகளே! உங்களால் முடிந்தால் யாகம் செய்யுங்கள். ஆடு வ்ங்குவதற்காக,ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு பைசா கூடக் கொடுக்கமாட்டேன்...யக்ஞம் நடத்தணும் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் ஸஹாயம் செய்திருக்கலாம். நீங்கள் எந்தக் காரியத்தைச் சொல்லிக் கேட்கிறீர்களோ, அதற்கு
உதவி செய்வது சந்யாஸ தர்மம் இல்லை" என்று கண்டிப்பாகச் சொன்னார்கள்")
சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு.
வேதவித்தகரும் அனுஷ்டாதாவும் நித்யாக்னிஹோத்ரியுமான ஒரு வைதிகர் தரிசனத்துக்கு வந்தார்.
பெரியவா, அவரைப் பற்றி விசாரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்; அவருடைய வைதிக அநுஷ்டானங்களைக் கொண்டாடினார்கள். அக்னிஹோத்ரி சொன்னார்;
"யாகம் பண்ணப் போறேன்..எல்லாம் ஸித்தமா இருக்கு....பலபேர் ஆதரவு கொடுக்கிறா...
"யாகப் பசுக்கள் (ஆடுகள்) வாங்கணும்...
நிறைய செலவாகும் போலிருக்கு....
பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்...
யாகப் பசுக்கள் வாங்க,ஸ்ரீ மடத்திலேர்ந்து த்ரவ்ய ஸஹாயம் செய்யணும்...."
யாகம் செய்யப் போவதைக் கேட்டு,தன் ஆசிகளைத் தெரிவித்துக் கொண்டார்கள், பெரியவா.
"நல்ல கார்யம். நன்னா நடக்கும்.யாகத்தில
பசு ஹிம்ஸை, அஹிம்ஸை தான்.தர்ம சம்மதம் தான். நான் ஒரு சந்யாஸி, என் தர்மம்-அஹிம்ஸா பரமோ தர்ம;என்பது.அதனால்,சந்யாஸியாகிய நான், யாகப்பசு வாங்கிக் கொடுப்பது தர்மமில்லை-என்று தோன்றுகிறது. ஆகவே யாராவது கிருஹஸ்தர்களிடம் போய். திரவ்ய ஸஹாயம் பெற்று யாகத்திப் பூர்த்தி செய்யுங்கள்."
வந்தவர், ரொம்ப பிடிவாதக்காரர். எப்படியாவது பெரியவாளிடமிருந்து பணம் பெறுவதில் குறியாக இருந்தார்.
"யக்ஞேஸ்வரன் வைகுண்டத்தில் இல்லை. இதோ சாக்ஷாத்தாக இங்கே இருக்கார்! பெரியவாதான் யக்ஞேஸ்வரன்.." என்றெல்லாம் ஸ்தோத்திரம் செய்தார்.
"சாஸ்திரிகளே! உங்களால் முடிந்தால் யாகம் செய்யுங்கள். ஆடு வ்ங்குவதற்காக,ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு பைசா கூடக் கொடுக்கமாட்டேன்...யக்ஞம் நடத்தணும் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் ஸஹாயம் செய்திருக்கலாம். நீங்கள் எந்தக் காரியத்தைச் சொல்லிக் கேட்கிறீர்களோ, அதற்கு
உதவி செய்வது சந்யாஸ தர்மம் இல்லை" என்று கண்டிப்பாகச் சொன்னார்கள்>
வந்தவருக்கு, ஏமாற்றம் தான் என்றாலும், தவறு தன்மேல் என்பதால், ஓரளவு சமாதானத்துடன் சென்றார்-என்று சிஷ்யர்களுக்கு தோன்றிற்று
Jaya Jaya shankara hare hare shankara
No comments:
Post a Comment