சமையல் டிப்ஸ் !!
❈ பச்சை மிளகாயில் உள்ள காம்பு பாகத்தை நீக்கி விட்டு அதை ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு அந்த பச்சை மிளகாயை ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்தலாம்.
❈ பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சையைப் பிழிந்து விட்டால் சாதம் உதிர் உதிராக இருக்கும்.
❈ இஞ்சி உடன் ஏலக்காயை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொள்ளவும். டீ வைக்கும் போது இதை ஒரு டீஸ்பூன் அளவிற்கு போட்டு கொதி வந்த பின் பருகவும். இது சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
❈ ஒரு கப் அளவு பாசிப் பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து காய்கறி சாலட் செய்யும்போது சேர்த்துக் கொள்ளுங்கள். சுவை நன்றாக இருக்கும். உடல் நலத்திற்கும் ஏற்றது.
❈ பூசணிக்காய் மீந்துவிட்டால் அதை நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால் அடுத்த நாள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.
❈ மோர்க் குழம்பு செய்யும் போது தேங்காய்க்கு பதிலாக கசகசாவை சேர்த்து அரைத்து மோர்க்குழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.
❈ லட்டு பிடிக்கும்போது ஏதாவது ஒரு பழ எசென்ஸ் விட்டுப் பிடித்தால் லட்டு சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
❈
பொட்டுக்கடலை உருண்டை பிடிக்கும்போது வறுத்த வேர்க்கடலையும், பொடித்த முந்திரியையும் சேர்த்துப் பிடித்தால் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment