🥗தகவல்📩 களஞ்சியம் 👩🍳
சமையலறைக் குறிப்பு.
பகிர்வு
இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்.
வெள்ளரிக் காயைத் தோல் சீவி துருவி, அரை கப் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கோதுமை மாவு 3 கப் சேர்த்துக் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வையுங்கள்.
சப்பாத்தி தயார் செய்ய துவங்கும்போது தேவையான உப்பு சேர்த்து பிசைந்தால் சுவை அருமையாக இருக்கும்.
ஊறுகாயிலுள்ள காய்கள் தீர்ந்து, வெறும் விழுது மட்டும் இருக்கிறதா?
ஒரு பாத்திரத்தில் நான்கைந்து சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு அதில் இரண்டு, மூன்று ஸ்பூன் ஊறுகாய் விழுதைக் கலந்து வைத்துக்கொண்டால் தயிர் சாதத்துக்கும், ஃப்ரைடு ரைஸ்க்கும் சூப்பர் சைட் டிஷ்ஷாக இருக்கும்.
வீட்டிலேயே கார்லிக் பிரெட் தயாரிக்க வேண்டுமா?
அரை ஸ்பூன் பூண்டு பேஸ்ட் எடுத்து, அதில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்துக்கொண்டு அதை பிரெட் துண்டுகளின் மேல் லேசாகத் தடவி, தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் கார்லிக் பிரெட் தயார்.
மொறுமொறு அடை வேண்டுமா?
அடை மாவை எண்ணெய் தடவிய கல்லில் வட்டமாக ஊற்றி, மாவில் சிறு சிறு துளைகள் போட வேண்டும். இப்போது அந்த துளைகளில் எல்லாம் சொட்டு சொட்டாக எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேகவிடுங்கள். அடைகள் மொறுமொறுவென இருப்பதுடன், தோசைக்கல்லும் பிசுக்கு பிடிக்காமல் இருக்கும்.
ஸ்நாக்ஸ் டப்பாவில் ஆப்பிள் போட்டு கொடுத்தனுப்புகிறீர்களா?
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, பழத்தை துண்டுகளாக நறுக்கியதும் சர்க்கரை நீரில் முக்கி, தண்ணீரை உதறிவிட்டு டப்பாவில் போட்டு வைத்தால், சுவை கூடுதலாக இருப்பதோடு, பழங்களின் நிறம் மாறாமலும் இருக்கும்.
No comments:
Post a Comment