🧩🧩🧩🧩🧩🧩🧩🧩🧩
சரோஜினி தேவி சமையல் பயிற்சி கூடம்
பல விதமான குழம்பு வகை ரெசிப்பிக்களைப் பார்க்கலாமா
பகிர்வு
சரோஜா தேவி சமையல் குழு
காளான் குழம்பு...
தேவையானபொருட்கள்....
நறுக்கிய காளான் - ஒரு கப்,
சின்ன வெங்காயம் - 10,
தேங்காய் துண்டுகள் - 2,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
மிளகு - 3 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை....
தேங்காய், மிளகு, சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு...
நறுக்கிய காளான், சின்ன வெங்காயம், அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் தெளித்து, அடுப்பில் வைத்து தட்டால் மூடவும்.
லேசாக வெந்ததும் மூடியைத் திறந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, காளான் வேகும்வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
___::::::::::::__
குண்டு மொச்சை குழம்பு......
தேவையானபொருட்கள்.....
கத்திரிக்காய் - 2,
முருங்கைக்காய், கீறிய பச்சை மிளகாய், தக்காளி, பெரிய வெங்காயம் - தலா 1,
புளி - எலுமிச்சை அளவு,
பூண்டு - 2 பல்,
தேங்காய் துண்டுகள் - 2,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி,
புளி - நெல்லிக்காய் அளவு,
மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை....
காய்களை நறுக்கிக் கொள்ளவும். வெறும் கடாயில் மொச்சையை வறுத்து, குக்கரில் போட்டு தண்ணீர் விட்டு, 5 நிமிடம் வேக வைக்கவும் (ஊற வைத்து, வேக வைப்பதனால் 3 விசில் வந்தால் போதும்). துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, தனியே எடுத்து வைக்கவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்தரிக்காய், முருங்கைக்காய், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கி... மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலையை போட்டு சிறிது நேரம் வதக்கவும். இதனுடன் தேங்காய் - சீரக விழுதை சேர்த்து ஒரு முறை கிளறவும். இவற்றை குக்கரில் போட்டு, புளியைக் கரைத்துவிட்டு, வேக வைத்து... பருப்பு, மொச்சை, தாளித்தது ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.🌷🌷__::::::::::::____
தேவையானபொருட்கள்....
பூண்டு - 100 கிராம்,
சின்ன வெங்காயம் - 20,
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
புளி - எலுமிச்சைப் பழ அளவு,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை.....
பூண்டைத் தோல் உரித்து இரண்டாக நறுக்கவும். வெங்காயத்தையும் தோல் உரித்து நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து... பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
இதில் சாம்பார் பொடி போட்டு வறுத்து, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.🌷🌷
___::::::::____
தக்காளி குழம்பு....
நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2,
கீறிய பச்சை மிளகாய் - 1,
பூண்டு - 2 பல்,
பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிதளவு,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்),
கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை.....
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு... பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரைத்த தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.🌷🌷
___::::::::::____
வெண்டைக்காய் குழம்பு.....
வெண்டைக்காய் - கால் கிலோ,
வெங்காயம் - 1,
கீறிய பச்சை மிளகாய், தக்காளி - தலா 2,
பூண்டு - 2 பல்,
புளி - நெல்லிக்காய் அளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்,
தேங்காய் துண்டுகள் - 2,
சீரகம் - ஒன்றரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, குழம்பு பொடி - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை......
வெங்காயம், வெண்டைக்காய், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, வெண்டைக்காய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி... மிளகாய்த்தூள், தேங்காய் - சீரகம் விழுதைப் போட்டு வதக்கவும்.
கடைசியாக புளியைக் கரைத்து ஊற்றி, சிறிது தண்ணீர் விட்டு, குழம்பு பொடி சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.🌷🌷
___::::::::::____
வேர்க்கடலை குழம்பு....
வேர்க்கடலை - அரை கப் (ஊற வைத்து, வேக வைக்கவும்),
தேங்காய் துண்டுகள் - 2 (அரைக்கவும்), கடுகு, உளுத்தம்பருப்பு,
சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
புளிக் கரைசல்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை....
ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு... அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். வேக வைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை போட்டு, பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும்.🌷🌷
கத்திரிக்காய்/ முருங்கைக்காய் குழம்பு....
கத்திரிக்காய் - 100 கிராம்,
சிறிய முருங்கைக்காய், வெங்காயம், தக்காளி - தலா 1,
பூண்டு - 2 பல்,
மிளகு - அரை டீஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
தனியாத்தூள், வறுத்து பொடித்த சீரகம்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
புளி - நெல்லிக்காய் அளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை.....
கத்திரிக்காய், முருங்கைக்காய், தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து, காய்ந்ததும் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, துவரம்பருப்பு போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இதில் முருங்கைக்காய் சேர்த்து வதக்கி, கத்திரிக்காய், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாத்தூள் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
புளியைக் கரைத்து ஊற்றி, காய் வேகும் அளவுக்கு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும். தீயைக் குறைத்து, சீரகத்தூளை சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
___:::::::::::___
அனைத்து வகையான குழம்பு தயார் செய்து சுவைத்து சாப்பிட்டு இந்த வெயில் காலத்தைக் கொண்டாடுவோம் நண்பர்களே.
சரோஜா தேவி சமையல் குழு
🧩🧩🧩🧩🧩🧩🧩🧩🧩
No comments:
Post a Comment