சில சூழல் காரணமாக நான் ப்ளஸ்டூ தாண்டி படிக்கவில்லை.
ஒரு சிறிய மருந்து கம்பெனியில் சேல்ஸ்மேனாக பணி புரிந்தேன்.
ஒரு all India operating pharma company மேனேஜர் திண்டுக்கல்லிற்கு candidate தேவை என்ற போது டிகிரி முடித்ததாக பொய் கூறினேன்.
அவருக்கு candidate தேவை. என்னை பிடித்து போனதால் கம்பெனியிடம் பேசி என்னை training அனுப்பினார்.
சென்னைக்கு training வந்தேன். இங்கு தான் பிரச்சனை ஏற்பட்டது. Training முழுக்க ஆங்கிலத்தில் இருந்தது. மேலும் வந்திருந்த மற்ற candidates science graduates என்பதால் அவர்கள் போல எனக்கு பாடங்களை புரிந்துக்கொள்ள முடியவில்லை.
அடுத்த நாள் Test . எனவே முதல்நாளே பேக்கை தூக்கி திண்டுக்கல் வந்துவிட்டேன்.
Training manager அடுத்த நாள் போன் செய்தார் . உடம்பு சரியில்லை நாலு நாள் கழித்து வருகிறேன் என்று கூறிவிட்டேன். பழைய இடத்தில் வேலைக்கு போக ஆரம்பித்தேன்.
நான்கு நாள் கழித்து training manager மீண்டும் அழைத்தார். அடுத்த நாள் தான் ட்ரெயினிங் கடைசி நாள்.
சென்னை சென்றேன். கடைசி நாள் என்பதால் எனக்கு பிறிதொரு நாளில் ட்ரெயினிங் வைப்பதாக கூறி அதுவரை பணிபுரிய materials தந்து அனுப்பி வைத்தனர்.
இனிதான் சவால்.
எங்களிடம் இருப்பது எல்லாம் me too products. பெரிதாக டாக்டரிடம் விளக்க வேண்டியது இல்லை.
எனவே டாக்டர்களை சந்திக்கும் தருணம் ப்ராடக் பற்றி பேசுவதை விட்டு அரசியல், சினிமா , ஜோதிடம் என அவர்களுக்கு பிடித்த சப்ஜக்டாக பேச ஆரம்பித்தேன்.
பேசன்ட்கள் பார்த்து களைத்த டாக்டர்களுக்கு இது தேவைப்பட்டது.
டாக்டருக்கு எந்த கட்சி பிடிக்குமோ அந்த கட்சி நான்.
பழக்கம் நெருங்கியதால் பிஸினஸ் எளிதாக வந்தது.
இப்படியே குறுகிய காலத்தில் தமிழ் நாடு நம்பர் 1 இடத்திற்கு வந்தேன்.
ஆல் இந்தியா அச்சிவர்ஸ் மீட் ஹிமாச்சலில் நடந்தது. கம்பெனி என்னை மதுரையில் இருந்தே ப்ளைட்டில் அழைத்து சென்றது.
ட்ரெயினிங்கிற்கு பயந்த கம்பெனியில் இப்போது நான் Top performer.
சாதித்தாய் நண்பா என கமெண்ட் போட துடிக்கிறதா. பொறுங்கள். இதையும் படியுங்கள்.
இந்த pharma industry வரும் முன் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் சர்விஸ் சென்று இருந்தேன். அங்கு சில சுவாமி படம் ஒன்று கிடைத்தது. பாபா மருத்துவர் போல stethoscope மாட்டி இருக்கும் ஒரு படம்.
அதை வாங்கி வந்திருந்தேன். சிறிது காலங்களில் சம்மந்தமே அற்ற இந்த மெடிக்கல் துறைக்கு நுழைந்தேன்.
சுவாமி comfortable ஆக பார்த்துக்கொண்டார். பின் வீடு கட்டியது கூட சுவாமி கருணையால் தான்.
நம் திறமை என நினைத்தால் அறிவினம். சுவாமி தான் நம்பர். நாம் பூஜ்யம். சுவாமி சேர்ந்தால் தான் நமக்கு value.
சுவாமியிடம் வந்தப்பின் எதைப்பற்றியும் கவலை வேண்டாம். தன் பக்தர்கள் கவலைப்படுவது சுவாமிக்கு பிடிக்காது. சுவாமி இன்னும் தந்துக்கொண்டு உள்ளார்.
சுவாமி அனைவரையும் நேசித்தார். சுவாமிபோல அனைவரையும் வெறுப்பின்றி மரியாதை செலுத்த வேண்டும் என்பதே என் ஆசை. வாழ்வில் சில இன்னல்கள் பொறாமை, கோபம் போன்றவை எழுவது சகஜம். அவற்றை சுவாமியிடம் சரண்டர் செய்து விட வேண்டும்.
! பாபா உங்கள் அனைவருக்கும் என்றும் நலன் புரிவாராக!

No comments:
Post a Comment