Thursday, April 21, 2022

லலிதா பரமேஸ்வரி திருக்கோயில், மாடம்பாக்கம்

 அருள்மிகு லலிதா பரமேஸ்வரி திருக்கோயில்..!!

இத்திருதலத்தின் சிறப்புகள் என்ன?

இந்த கோயிலில் ஸ்ரீ சக்ரநாயகி லலிதா பரமேஸ்வரி அம்பாள் பிரதானமாக இருக்கிறாள். எனவே இந்த கோயிலை லலிதா பரமேஸ்வரி கோயில் என்று அழைக்கின்றனர்.

இங்கு ஒரே பச்சைக்கல்லில் உருவான மகாமேரு அம்பிகை சன்னிதியும் பசுமடமும் இத்திருத்தலத்தில் உள்ளது.

இங்கு பாம்பாட்டி சித்தர், கருவூரார், வள்ளலார், குதம்பை சித்தர், கபிலர் சித்தர், சென்னிமலை சித்தர், கஞ்சமலை சித்தர், கடுவெளி சித்தர், பட்டினத்தடிகள், இடைக்காடர், அழுகணி சித்தர், அகப்பேய் சித்தர், கைலாய கம்பளிச்சட்டைமுனி சித்தர், சிவவாக்கியர், சட்டைமுனி, புலிப்பாணி, காகபுஜண்டர், போகர் ஆகிய பதினெட்டு சித்தர்களையும் ஒரு சேர தரிசிக்கலாம்

மேலும் 18 சித்தர்களும் கிரக தோஷங்களை நீக்கி, நவகிரகங்களின் சக்திகளையும், செயல்பாடு.று அருள்பாலித்து வருவதால் இவ்வாறு செய்துள்ளனர்.

வேறென்ன சிறப்பு?

சேஷாத்திரி சுவாமிகள், குருவாயூரப்பன், சக்தி பீட கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், ஆஞ்சநேயர், கோதண்டராமர், நாகராஜர், முனீஸ்வரர், பச்சைக்கல் ராஜ காளியம்மன், தட்சிணாமூர்த்தி, காமதேனு, நால்வர், நந்திகேஸ்வரர், மகாவிஷ்ணு, பிருந்தா சன்னிதிகள் அமையப் பெற்றுள்ளது.

இதில் சிறப்பு என்னவென்றால் திருவிழா மற்றும் சிறப்பு பூஜை காலங்களில் பெண்களே யாகம் நடத்துகிறார்கள். மேலும் வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்வதாக முன்னோர்களின் நம்பிக்கை..

இத்திருத்தலத்தில் குறிப்பாக பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

இந்த கோயில் எங்கு உள்ளது?

சென்னை மாவட்டத்திலு உள்ள மாடம்பாக்கம் என்னும் ஊரில் அருள்மிகு லலிதா பரமேஸ்வரி திருக்கோயில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment