Thursday, April 21, 2022

ஆங்கிலம் அறிவோம் - 4

ஆங்கிலத்தில PRICE,  COST,   VALUE ...... முதல் பார்வையில் இந்த மூன்று வார்த்தைகளும் synonyms போல....கிட்டத்தட்ட ஒரே பொருள் கொண்டவையாக தென்படும்...........உற்று கவனித்தால்....,மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம்.

Price....என்பது ஒரு பொருளை வாங்கும்போது, நமதாக்கிக்கொள்ளும்போது....,நாம் கொடுக்கும் விலை. ஒரு கிலோ அரிசி.....55 ரூபாய் என்றால்அது அதன் price. ஒரு வீடு 55 லகரம் என்றால் அது வீட்டின் விலை...price.

Cost என்பது கணக்கில் வராத , காட்ட முடியாத....வேறு வித செலவுகள்.ஒரு பொருளை வாங்கப்போகும்போது ஆகும் petrol , நேரம், அலைச்சல், effort, மன உளைச்சல் ........எல்லாமும் சேர்ந்த ஒரு கலவை COST. IT cost me a full day ! It cost me my job! எத்தனையோ பிரயோகங்கள்.

இது இரண்டுமல்லாதது...,மேலானது value. ஒரே பொருள் ஒருவருக்கு zero value வாகவும்.மற்றொருவருக்கு விலை மதிக்க முடியாததாகவும் அமையும்.குப்பையில. எறியப்பட்ட துண்டு காகித்த்தில் கோணா மாணாவென்று கிறுக்கி,  I Love You Daddy என்று, என் சிறு குழந்தை எழுதியது............,என்னைப் பொறுத்தவரை......, பல கோடி பெறும். பக்கத்து வீட்டாருக்கு அதன் value பூஜ்யம் . 

காலத்தில் செய்த சிறு உதவி, நம் நன்மை கருதி அளிக்கப்படும் advice ....துவண்டபோது சொல்லும் ஆறுதல் வார்த்தைகள், unconditional acceptance......இப்படி பல விஷயங்கள்......விலை நிர்ணயிக்க முடியாதவையாக. விலைக்கு அப்பாற்பட்டவை. Valuable. Value உடையவை.....

பொருளின் (களின்) price தெரிந்தவன்......வியாபாரி.

அதன் (அவைகளின்) cost தெரிந்தவன் குடும்பஸ்தன்.....prudent & frugal person

ஒவ்வொரு பொருளையும் அதன் value தெரிந்து கொண்டு போற்றுபவன் ,பொக்கிஷமாக காப்பாற்றுபவன் 'மனிதன் ' உயர்ந்த மனிதன் !!! 

Hair extensions போல, இதோ கொஞ்சம் சிந்தனை extension............Price,cost,value குறித்த மேல் கண்ட  பதிவுக்கு இது கொசுறு ......

ஒரு காலத்தில் free of cost ல் கிடைத்த பல விஷயங்கள் priceless ஆக invaluable ஆக மதிக்கப்பட்டன. இன்றோ price tag உண்டு : value மட்டும் இல்லை. 

ஆறும், நதியும் , குளமும் , குட்டையும் ...... பொங்கி வழிந்து தந்த தேனூறும் நீர் இன்று .... குழாய்களில் (அங்கும் பாதி நேரம் காற்றுதான் வரும்), tankersல், water cans ல்....,பணமின்றி தாகம் தணிப்பது முடியாது.

சுத்தமான காற்று.... இன்று concrete jungles இடையே....,  

உள்புக இடமில்லாமல்.....,மின்விசிறிகள்,a/c......, சுழற்றியடிக்கும் artificial , bacteria borne காற்று மட்டுமே.,,,

இயற்கை நமக்குத்தந்த அத்தனையும் ஒரு காலத்தில் price/ cost free. ஆனால் விலைமதிப்பற்றதாக......இறை அம்சமாகவே போற்றப்பட்டன ...

வாயு பகவான், தேவேந்திரன், சூரிய பகவான், கங்கா மைய்யா.......காவேரித்தாய் இப்படி..............,விளிக்கும் விதத்திலேயே ஒரு வாஞ்சை : அழைத்த முறையிலே ஒரு மரியாதை....... 

இன்றோ, எல்லாவற்றிற்கும் விலையுண்டு : 

மதிப்பில்லை, மரியாதையில்லை,

இயற்கை வளங்களெல்லாம் வற்றி, அழிந்து , ethical values 'காலி' 

ஆனதால், வந்த பெயரோ, நின்ற பெயரோ ............ 'கலி காலம்' என்பது........!!!

N R


No comments:

Post a Comment