Thursday, April 21, 2022

மனிதன் உருவாக்கிய அற்புதம் – லார்டல் குகை

 மனிதன் உருவாக்கிய அற்புதம் – லார்டல் குகை

மலைகளைக் குடைந்து உருவாக்கப்படும் குகைச் சாலைகளின் தலைவனாக அறியப்படுகிறது நார்வே. காரணம், அந்நாட்டின் நிலப்பரப்பில் காணப்படும் எக்கச்சக்கமான மலைகள். கிட்டத்தட்ட 900 குகைச் சாலைகளை நார்வே அரசு போக்குவரத்திற்காக அமைத்துள்ளது. நிலப்பரப்பின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான குகைச் சாலையும் இந்த எண்ணிக்கையில் அடங்கும்.

லார்டல்(Laerdal Tunnel) குகை என்று அழைக்கப்படும் இக்குகைச் சாலையின் நீளம் 24.5 கிலோமீட்டர்கள். 114 மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இதனைக் கட்டிமுடிக்க ஐந்து ஆண்டுகள் ஆனது. 2.5 மில்லியன் க்யூபிக் மீட்டர் பாறைகள், இக்குகை தோண்டும்போது வெட்டி எடுக்கப்பட்டன. சாட்டிலைட்டுகள் மற்றும் கம்ப்யூட்டர் ட்ரில்லர்களின் துணை கொண்டு இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. குகைச்சாலைக்குள் பயணிக்கும் மக்களின் பயணத்தை இனிதாக்க, மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனை கேட்கப்பட்டு அதன்படி குகையின் உள்பக்கம் வடிவமைக்கப்பட்டது.

எமர்ஜன்ஸி எக்ஸிட் எதுவும் இல்லாத(!!) இந்தக்குகைச் சாலையில் 250 மீட்டர்களுக்கு ஒரு அவசர உதவி தொலைபேசி வைக்கப்பட்டுள்ளது. குகையின் இரண்டு பக்கமும் ராட்சச மின் விசிறிகள் வைக்கப்பட்டு சுவாசத்திற்கான காற்று உள்ளிழுக்கப்படுகிறது. குகைக்குள்ளிருக்கும் அசுத்தமான காற்றை சுத்தமானதாக மாற்றவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவசர காலங்களில் வண்டியை வந்த வழியாகத் திருப்பி குகையிலிருந்து வெளியே செல்வதற்காக, குகையின் நடுநடுவே சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment