Tuesday, April 12, 2022

பொட்டு கடலை பட்டர் முறுக்கு

 பொட்டு கடலை பட்டர் முறுக்கு 

🍱 தேவையான பொருட்கள்: 

பொட்டுக்கடலை - 2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன்  
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 

🍴 செய்முறை  : 

மிக்ஸியில்   பொட்டுக்கடலையை  மாவாக அரைத்து கொள்ளவும். அதோடு வெண்ணெய், அரிசி மாவு, உப்பு, சீரகம் சேர்த்து தண்ணீர் ஊற்றிப் பிசைந்து கொள்ளவும். 

ஒரு துளையுள்ள அச்சில்  மாவை நிரப்பி, அடுப்பில் சூடாகிக் கொண்டிருக்கும் எண்ணெய்யில் பிழியுங்கள். 

பொன்னிறமாக வெந்ததும் எடுத்து  ஆற விடுங்கள். பின்பு காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து உங்களுடைய குட்டிஸ்க்கு கொடுங்க. 



No comments:

Post a Comment