தேனம்பாக்கம் – 16/06/2020
பொதுவாக அனுஷ்டானம் என்பது நாம் தினமும் செய்ய வேண்டிய தர்மம், கடமை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுஷ்டான முறை இருக்கும். நமக்கென்று விதிக்கப்பட்ட அனுஷ்டானம் செய்வது நமது தெய்வீகக் கடமை என்றே சொல்லலாம். அதனால் தான் பெரிய மகான்கள், யோகிகள் கூட தினமும் அவரவர்களின் அனுஷ்டானத்தினை செய்து, நமக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்கள். நடமாடும் தெய்வம் என்று போற்றப்படும் காஞ்சி மஹா பெரியவர்கள் தனது அனுஷ்டானத்தை விடாமல் செய்து கொண்டு , சொல்லாமல் நமக்கு வழிகாட்டி வந்தார்கள்.
என்னைப் போன்ற சிலர் தினமும் அனுஷ்டானம் செய்யாமல் இன்றும் உள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்கிற போது அவரச வேலை வந்து விடும். அப்பொழுது தான் அலுவலக வேலை பற்றி நினைவிற்கு வரும். பல மறந்த வேலைகள் நமக்கு ஞாபகம் வரும் நேரமே , நாம் அனுஷ்டானம் செய்யும் போதுதான் என்பது பெரும்பாலானவர்களின் அனுபவம். ஏனென்றால் அனுஷ்டானம் என்பது நமது “வேலை” இல்லை என்று கருதுவதே. நமது கடமை, தர்மத்தை விட “வேலை” முக்கியமாகி விடுகிறது. அதனால், உடனே பலத்தை தராத, தெரியாத அனுஷ்டானம் நமக்கு முக்கியமான வேலையாகத் தெரியவில்லை.
நேற்று இரவு பெரியவா பூஜையை முடித்துக் கொண்டு சிறிது நேரம் உரையாடிக்கொண்டு இருந்தார். அச்சமயம், கன்னடியன் கால்வாய் என்பதைப் பற்றி பேச்சு வந்தது. அப்பொழுது பெரியவா ஒரு விரல், இரண்டு விரல், மூன்று விரல் என்று காண்பித்தார். அதைப் பற்றி எழுதவும் என்றார். எனக்கு என்னவென்று புரியவில்லை. .
சுமார் அறுநூறு வருடங்கள் முன் திருவனந்தபுரத்தில், கேரளா ராஜாவிற்கு தீராத ரோகம் வந்தது. அதை ராஜ வைத்யம் மூலமும் நிவர்த்தி செய்ய முடியவில்லை. ஆனால், ராஜாவிற்கு ஒரு ஸ்வப்னம் தோன்றியது: “ராஜாவே, உனக்கு ஏற்ப்பட்டிருப்பது கர்ம வியாதி. இதை அனுபவித்து தீர்க்க வேண்டும். ஆனால், ஒன்று செய்யலாம். உன் ஆக்ருதிக்கு எள்ளினால் ஒரு பிரதிமை பண்ணி அதற்குள் பூராவும் ;தங்கத்தினால் நிரப்பி, அதிலே உன் கர்மாவை, பாபத்தை ரோகத்தை ஆவாஹனம் செய்து, சத்தான ஒரு பிராமணனுக்கு தானம் கொடுத்து விடு. அப்போது உன் கர்மா உன்னைவிட்டு அவனிடம் போய்விடும். அவன் நல்ல மந்திர சக்தி யுள்ளவனாய் இருந்தால் ரோகத்தை ஜெரித்துக் கொண்டு விடுவான்:”.
ஆனால் பல நாட்கள் தானம் வாங்கிக்கொள்ள யாரும் வரவில்லை. பல திசைகளில் செய்திகள் சென்றன. யாரும் வரவில்லை. கடைசியாக ஒரு கன்னட பிராமணன் வந்து அதை பெற்றுக் கொண்டான். ராஜா அந்த பொம்மையை பிராம்மணன் அவர்களுக்குத் தந்தான். அப்பொழுது ஆச்சிரியமாக அவன் உற்றுப் பார்க்க, சுண்டு விரலையும், கட்டை விரலையும் மடித்து, மற்ற மூன்று விரல்களையும் நீட்டியது. பின் பிரம்மச்சாரி ஏதோ சொல்ல, இரண்டு விரல்களையும், பின் ஒரு ஆள் காட்டி விரலை நீட்டியது. கடைசியில் அந்த பிம்பம் அவன் காலிலே விழுந்து மன்னிப்புக் கேட்டதுபுரியாத ராஜ என்னவென்று வினவினான்.. பின் பிரம்மச்சாரி விளக்கினான்:
:பிரம்மச்சாரி உற்றுப்பார்த்தபோது, “உனக்கு என்னுடைய மந்திர ஜெபத்தில் எவ்வளவு பலனை நீ கொடுத்தால் என்னை பாதிக்காமல் போவாய் என்று மானசீகமாய் கேட்டானாம். மூன்று விரலைக் காட்டி, மூன்று வேலை செய்யும் த்ரிகால சந்த்யா வந்தன பலனைக் கேட்டதாம். முடியாது என்று சொன்னவுடன் மூன்று வேளைகளில் இரண்டின் பலனைக் கேட்டதாம் இரண்டு விரல்களைக் காட்டி. முடியாது என்று சொன்னவுடன், ஒரு விரலைக் காட்டி, ஒரு வேலை சந்தியவன்தனப் பலனைக் கேட்டதாம். தருகிறேன் என்று சொன்னவுடன், அந்த பிம்பம் சென்றதாம். இதன் மூலம் முறைப்படி காயத்ரி ஜபம் செய்தால் எத்தனை சக்தி, வீரியம் உள்ளது என்று இதன் மூலம் தெரிகிறது.
இன்று முறையாக காலையிலும், பகலிலும் சந்தியாவந்தனம் செய்தேன். தினமும் மூன்று வேலை செய்ய வேண்டும் என்று ஒரு சங்கல்பம்
No comments:
Post a Comment