காஞ்சி மஹா பெரியவாள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் பத்திரிக்கையாளர் அருகில் வந்து, பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.
வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் ஸ்ரீ காஞ்சி காமகோடி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா) எப்படிப்பட்ட மேதாவி என்பதை உலகம் நன்கறியும்.
பத்திரிக்கையாளர் மஹா ஸ்வாமிகள் அருகில் வந்து, பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். மிக ஸ்வாரஸ்யமாக சென்று கொண்டிருந்த பேட்டியில் உலக ஜனங்கள் அனைவரும் மனம் பதறும்படியாக கேள்வி ஒன்றை கேட்டார் அந்த பத்திரிக்கையாளர்.
அப்படி என்ன கேள்வி ?
“ பெரியவா ? தாங்கள் சன்னியாஸம் வாங்கி கொண்டதற்காக எப்பொழுதாவது வருத்தப்பட்டது உண்டா ? “என்பது தான் அந்த கேள்வி.
இந்த கேள்வியினால் ஸ்ரீ மடமே ஸ்தம்பித்தது ? எங்கும் அமைதி. அமைதி.. அமைதி…
சுதாரித்துக்கொண்ட சிலர், அந்த பத்திரிக்கையாளரை கடிந்துக்கொள்ள யத்தனிக்கையில், ஸ்ரீ சரணாள், அவர்களை அமர்த்தி, அந்த பத்திரிக்கையாளரிடம் பின் வருமாறு கூறினார்.
“ பகவான் நாம சங்கீர்த்தனம் செய்யும் பாகவதர்கள், குத்துவிளக்குடன் திவ்யநாம சங்கீர்த்தனம் ஆரம்பிக்கும் நேரத்தில், அந்த பாகவதர்களுக்கு என்னால் நமஸ்காரம் செய்ய முடியாத நேரத்தில், நான் சன்னியாஸம் வாங்கி கொண்டதற்காக வருத்தப்பட்டது உண்டு“.
வழி தேடும் எனை காக்க மஹாபெரியவா நீ வேண்டுமே!
என் தெய்வமே!
காமகோடி தர்சனம்,
காணக்காண புண்யம்.
No comments:
Post a Comment