பார்வை விசாலமாக இருந்தால் வெற்றியும் பிரமாண்டமாய் இருக்கும்.
༺🌷༻
சுரேஷ், ஆனந்த் என்று இரண்டு நண்பர்கள் இருந்தனர். பட்டம் பெற்ற பிறகு இருவரும் ஒரு பெரிய விற்பனை நிறுவனத்தில் சேர்ந்து கொண்டனர். இருவரும் மிகவும் கடினமாக உழைத்தனர்.
மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன, நிறுவனத்தின் இயக்குனர் பிரமோஷன் முலம் அவர்களில் ஒருவரான ஆனந்தை விற்பனை நிர்வாகியாக தேர்ந்தெடுத்தார். சுரேஷ் எந்த பதவி உயர்வையும் பெறவில்லை.
இது நியாயமற்றது என்று சுரேஷ் நினைத்தார்.
༺🌷༻
எனவே அவர் தனது முதலாளியிடம் வந்து சொன்னார், தானும் ஒரு கடின உழைப்பாளி. என் உழைப்புக்கு எந்த பிரமோஷனும் கொடுக்கப்படவில்லையே.
சுரேஷ் கடினமாக உழைக்கிறார் என்று முதலாளிக்குத் தெரியும், ஆனால் அவருக்கும் ஆனந்த்துக்கும் இடையிலான வேறுபாட்டைக் சுட்டிக்காட்ட , முதலாளி விரும்பினார்.
༺🌷༻
சுரேஷ் நீங்கள் சென்று சந்தையில் தர்பூசணிகள் இருக்கிறதா என்று விபரம் அறிந்து வாருங்கள் என்று அனுப்பினார். அவரும் திரும்பி வந்து தர்பூசணி இருக்கிறது என்றார்.
முதலாளி கேட்டார்: ஒரு கிலோவுக்கு எவ்வளவு?
சுரேஷ் மீண்டும் சந்தைக்குச் சென்றார், பின்னர் ஒரு கிலோவுக்கு $ 12 விலை என்று கூறினார்.
༺🌷༻
பின்னர் முதலாளி ஆனந்திடம் அதையே கேட்டார். #மகரயாழ் ஆனந்த் சந்தைக்குச் சென்றார், அவர் திரும்பி வந்து கூறினார்: இப்ப சந்தையில் ஒரு நபர் மட்டுமே தர்பூசணியை விற்கிறார், ஒரு கிலோவுக்கு $ 12.
10 கிலோவுக்கு $ 100, இப்போது அவரிடம் 340 தர்பூசணி உள்ளது. அவை ஒவ்வொன்றும் சுமார் 15 கிலோ எடையுள்ளவை. இரண்டு நாட்களுக்கு முன்பு தெற்கிலிருந்து வாங்கப்பட்டன, அவை புதியவை, நல்ல தரம் வாய்ந்தவை.
தனக்கும் ஆனந்துக்கும் உள்ள வித்தியாசத்தை சுரேஷ் உணர்ந்து கொண்டார்.
༺🌷༻
இந்த கதையிலிருந்து நாம் உணர வேண்டியது.
சராசரி மனிதர்கள் நாளை மட்டுமே சிந்தித்துப் பார்க்கிறார்கள்.
வெற்றிகரமான மனிதர்கள் பல வருடங்கள் தாண்டி சிந்தித்துப் பார்க்கிறார்கள்.
No comments:
Post a Comment