Sunday, June 21, 2020

இருமல் குணமாக

இருமல் குணமாக

மிளகுடன் சம அளவு உடைத்த கடலையைச் சேர்த்து பொடி செய்து பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் உடனே குணமாகும்.

ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கி,அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு இதனைக் குடிக்கலாம்.இது இருமலுக்கு மிக நல்ல மருந்து.

5 கிராம் சித்தரத்தையுடன்,உலர் திராட்சையைச் சேர்த்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால் இருமல் உடனே தணியும்.
ஒரு கைப்பிடி புதினா இலை , 3 மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் மற்றும் நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

திப்பிலியை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் குணமாகும்.

பெருங்காயத்தை நீர் சேர்த்து அரைத்து குழந்தைகைளின் நெஞ்சில் தடவினால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை , ஒரு டீஸ்பூன் நெய்யில் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். இது இருமலை இயற்கை வழியில் நீக்கும்.

பெருங்காயத்துடன் கோழி முட்டையின் மஞ்சள் கருவை கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் தீரும்.

ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மிளகை நன்கு சிவப்பாக வறுத்து கொண்டு அந்த சட்டியில் சிறிது நீரை ஊற்றி மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். இதில் பாதி நீரை காலையிலும் மீதி நீரை மாலையிலும் குடித்து வர வறட்டு இருமல் சரியாகும்.

வெங்காயச் சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால் மார்புச் சளி மற்றும் இருமல் குணமாகும்.

No comments:

Post a Comment