Tuesday, August 16, 2022

என் சமையலறையில்

 என் சமையலறையில் 

என் வீடு பாஸ்டன் ஒட்டிய நகரில் 1975 -ல் கட்டப்பட்டது. அந்த காலகட்டத்து வீடுகள் மிகவும் பெரிது அல்ல, ஆதலால் என் சமையல் அறையும் மத்திமம் சைஸ் மட்டுமே. அதனால் பொருட்கள் அனைத்தையும் இங்கேயே வைக்க இடம் போரவில்லை என்பதால், டைனிங் ஹால் -ல் கூட சில ஓபன்-டியர் ஸ்டாண்ட்கள் வைத்து பாத்திரங்களை அங்கே வைத்துக் கொண்டுள்ளோம். 

சமையல் அறையில் கூடுமானவரை நீட்னஸ் maintain செய்து வருகிறேன். என் நாத்தனார் சொல்வார், "வீடையும், சமையல் அறையையும் சுத்தமாக வைத்துக்கொள்பவர்கள் வீட்டில் சமையல் மிக குறைவாக இருக்கும். முக்கியமாக இவர்கள் வீட்டுக்கு சென்றால் காபி தவிர ஒன்றும் கிடைக்காது" என்று. இது நிறைய பேர் விஷயத்தில் உண்மையே! ஆயினும் என் வீட்டில் இந்த rule பொய்யே. காலை விஸ்தாரமான சமையல், மாலை தவறாமல் டிபன் என் வீட்டில் உண்டு. அதிலும் என் மகன், மகள் இருவரும் வடக்கு இந்திய sabji வகைகளையே உண்வார்கள். அதனால் எங்களுக்கு தென்னிந்திய பாரம்பர்ய உணவும், மகனுக்கு தனி, மகளுக்கு தனி என்று மூன்று வகை உணவை சமைக்கும் நாட்கள் அநேகம்! இருப்பினும் பாத்திரங்கள் சேர்ந்து விடாமல், routine ஆக டிஷ்வாஷரில் ஸ்டாக் செய்து விடுவேன். அடுப்பை அடிக்கடி தேய்த்து பள, பள என்று வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். யாராவது வீட்டுக்கு வந்தால் அவர்கள் அடிமட்ட நிலையில் இருப்பவர்கள் என்றால் கூட வரிந்து கட்டி அவர்களுக்கு சமைத்து என் அன்பை வெளிப்படுத்துவேன். சிலர் கூறுவதுண்டு: பிறருக்கு பொருட்களோ, பணமோ எது குடுத்தாமல் திருப்தி ஏற்படாது, ஆனால் சாப்பிட அன்னமிட்டால் அவர்களே "போறும் போறும்" என்று வயிறு நிறைவார்கள் என. ஸ்ரீ மஹாபெரியாவாள் கூட "அதிதி உபச்சாரம்" என்பதன் முக்கியத்துவத்தை பலமுறை சொல்லியிருக்கிறார் அல்லவா? தவிரவும் என் நண்பர்கள் சிலருக்கு என் வீட்டில் routine  ஆக விருந்து வாராவாரம் உண்டு.

சமையல் அறையிலேயே ஒரு மூலையில் உள்ள cupboard தான் எங்கள் சுவாமி சந்நிதி. விஷேஷ நாட்களின் போது, சமையல் அறையை முழுதும் சுப்தம் செய்து, கோலம் போட்டு அலங்கரித்து கொண்டாடுவோம்.

என் சமையல் அறையை நன்கு பராமரிக்க என் கணவரும் உதவுவார், எனக்கு முடியாத போதெல்லாம் பாத்திரங்களை டிஷ்வாஷெரில் போட்டு தருவார். 

அடுத்த வருடம் சமையல் அறைக்கு ஒரு facelift கொடுக்க பிளான் செய்திருக்கிறோம். அதற்க்கு பின்னர் சமையல் அறையில் புழங்க இன்னும் பிடிக்கும் என நினைக்கிறேன். :D

No comments:

Post a Comment