*குழந்தைகள் விரும்பும் ஸ்டப்ட் பாகற்காய் தயார் செய்வது எப்படி?*
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 5
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
புளி - சிறிய துண்டு
கடலைமாவு - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 4 குழிக்கரண்டி
தனியாத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பாகற்காயை நடுவில் வெட்டி விதைகளை நீக்கி கொள்ளவும். உள்பகுதியில் லேசாக உப்பு தடவி அரைமணி நேரம் கழித்து நன்றாக கழுவினால் கசப்பு நீங்கி விடும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்து வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள்.
அதில் புளியை தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள். பின் கடலைமாவு, மிளகாய்த்தூளைப் போட்டு நன்றாக கிளறி, ஆறவையுங்கள். இந்த கலவையை பாகற்காயில் வைத்து நூலால் தனித்தனியாக கட்டி விடுங்கள்.
வாணலியில் மிதமான தீயில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அதில் பாகற்காயை போட்டு வேகவையுங்கள். இருபக்கம் திரும்பி வேகவைத்து எடுத்தால் ஸ்டப்ட் பாகற்காய் தயார்.
*பகிர்வு*
No comments:
Post a Comment