Friday, August 19, 2022

சீப்பு சீடை

 சீப்பு சீடை

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு

உளுத்தம் மாவு1ஃ2 கப் 
அரிசி மாவு1ஃ2 கப் 
கடலை மாவு1ஃ2 கப் 
தேங்காய் பால்1ஃ2 கப் 
வெண்ணெய்2 டீஸ்பு ன் 
உப்புதேவையான அளவு 
எண்ணெய் தேவையான அளவு 

செய்முறை :

  சீப்பு சீடை செய்வதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும். 

  பிறகு அதில் தேங்காய் பாலை லேசாக சு டேற்றி பிசைந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசையவும். பிறகு முறுக்கு அச்சில் தட்டையாக இருக்கும் சீப்பு அச்சில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழியவும்.

  பிறகு கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, அதனை உருட்டிக் கொள்ளவும்.

  பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சு டானதும், உருட்டி வைத்துள்ள மாவைப் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான சீப்பு சீடை ரெடி.

No comments:

Post a Comment