Tuesday, August 16, 2022

சிறுதாமூர் கிராமம்

 சிறுதாமூர் கிராமம். 

தேசிய நெடுஞ்சாலை 45 ல்  சென்னையிலிருந்து 100  கிலோ மீட்டர் சென்று வலப்புறம் திரும்பி மேற்கொண்டு ஐந்து கிலோமீட்டர் சென்றால் வரும் அழகிய கிராமம்.. 

அழகிய கிராமம் மட்டுமின்றி அது ஓர் அதிசய கிராமமும் கூட... 

ஆமாம்... 

மிகவும் சுத்த சுகாதாரமான கிராமம்.. அதனால் தமிழகத்தில் இக்கிராமத்தில் இது வரை யாரும் கொராணாவால் பாதிக்கப்பட்டது கிடையாது. மேலும் அக்கிராம மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்கள்  .

நெடுஞ்சாலையிலிருந்து விலகி வலப்புறம் திரும்பி , உள்ளே 5 கி மி போய் சிறுத்தாமூர் கிராம பள்ளியை அடைந்தாயிற்று .

அருகில் ஸ்ரீனிவாஸ பெருமாள் கோவில். 

அரசு வசம் போகவில்லை. அதனால் அக் கோவிலில் உண்டியல் கிடையாது.. 

தரை முழுவதும் பளிங்கு கற்கள்.. இலை போடாமல் தரையிலேயே சாப்பிடலாம். 

அத்தனை சுத்தம்  ! 

மூலவர் ஸ்ரீனிவாஸ பெருமாள்.. தாயார் பத்மாவதி 

கோவில் சுற்றில் ராமானுஜர் சிரித்த நிலையில் இருக்கிறார்.. ஹைதராபாத் ராமானுஜரை வடிவமைத்த ஸ்தபதி தான் இவரையும் உருவாக்கினார். 

கோவில் ஸ்ரீரங்கத்திற்கும்  ,  திருப்பதி க்கும் மிகச் சரியான நடுவில் உள்ளது. 

இக் கோவிலிலிருந்து ஸ்ரீரங்கம் 213 கி மி. அஃதே திருப்பதியிலிருந்து இக்கோவில் 213 கி மீட்டர்தான்  ! 

சக்கரத்தாழ்வார் எல்லா கோவில்களிலும் சககரத்தில் வீற்றிருப்பார். இங்கே பூமியில் இருக்கிறார். 

பின்புறம் யோக நரசிம்மர் இருக்கிறார்.. 

விதானத்தில் பெண் கருடன்கள் காணப் படுகிறார்கள்  ! 

எப்போதும் கூப்பிய கரங்களுடன் ஸ்ரீ ராமபக்த அனுமானாக காட்சியளிக்கும் அஞ்சன புத்திரன் இங்கு அபய வரத ஆஞ்சநேயராக ஆசி வழங்கிய படி காட்சி தருகிறார். 

வால் தலைக்கு மேல உள்ளது  வால் நுனியில் மணி உள்ளது  ! 

எல்லாம் முடிந்த பிறகு எங்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 

மடப்பள்ளியிலிருந்து சூடாக சுவையாக அக்கார வடிசல் ( சக்கரை பொங்கல்  )  பலவித காய்கறி கலவை சாம்பார் சாதம்  ,  புளியோதரை  , தத்தியன்னம் ( தயிர் சாதம்  ) சுண்டல்., வருவல் ஆகியவை பரிமாறப்பட்டன.. 

என்ன சுவை.. என்ன சுவை. 

இப்போதுதான் உணவகத்தில் நிறைய சாப்பிட்ட தற்கு மிகவும் வருந்தினேன்.

No comments:

Post a Comment