1562
சகல சாப்பாட்டு பிரியர்களுக்கு சமர்ப்பணம்
பல் முளைக்கா பிஞ்சுகளுக்கு பருப்பு சாதமே சொர்க்கம்.
மார்கழி மாத குளிரில் மணக்கும் வெண்பொங்கல் சொர்க்கம்
கார மிளகு தாளித்த பொங்கலுடன் கத்திரிக்காய் கொத்ஸ்சே சொர்க்கம்.
பூரிக்கு, உருளை கிழங்கு மசாலா தோசைக்கு வெங்காய சட்னி, இட்லிக்கு மிளகாய் பொடி + நல்ல எண்ணெய், பிரியாணிக்கு தயிர் பச்சடி, வெண் பொங்கலுக்கு கத்தரிக்காய் கொத்சு, வாழைக்காய் பஜ்ஜிக்கு தேங்காய் சட்னி, சப்பாத்திக்கு குருமா சொர்க்கம்.
பரங்கிக்காய் சாம்பாருக்கு - பீன்ஸ் பருப்பு உசிலி சொர்க்கம்.
கதம்ப சாம்பாருக்கு - பொடியிடிச்ச கத்திரிக்காய் கறி சொர்க்கம்.
குடைமிளகாய் சாம்பாருக்கு கோஸ் பட்டாணி கறி சொர்க்கம்.
உலகிலுள்ள அத்தனை சாம்பாருக்கும்உருளைக் காரகறியே சொர்க்கம்.
வெந்தய குழம்பிற்கு வெண்டைக்காய் கறி சொர்க்கம்.
சுண்டைக்காய் வத்த குழம்பிற்கு சுட்ட அப்பளமே சொர்க்கம்.
பத்திய மிளகு குழம்பிற்கு பருப்பு துவையலே சொர்க்கம்.
மத்தியான தயிர் சாதத்திற்கு மாவடு இருந்தால் சொர்க்கம்.
அடைக்கு வெல்லத்தோடு அவியல் இருந்தா சொர்க்கம்.
மீந்து போன அடைமாவில் Brilliant குணுக்கு சொர்க்கம்.
ஒருவாரமான தோசைமாவில் ஊத்தப்பமே சொர்க்கம்.
பசியில் துடிப்பவனுக்கு பழைய சோறே சொர்க்கம்.
நோயில் வீழ்ந்தவனுக்குநநோய்க் கஞ்சியே சொர்க்கம்.
No comments:
Post a Comment