ஆன்மீக சபா
25-08-2022
Prema in facebook post
முதலில் எனக்கு கோவில் பற்றி சொல்ல வாய்ப்பு அளித்த மத்யமருக்கு மிக்க நன்றி.
you tube link இல் முதலில் இசைக் குடும்பம் ஆகிய Nikila Shyam Sunder வின் பேரன் sri Raghav என்ற 7 வயதுப் பையன் "கடவுள் வாழ்த்து" அருமையாகப் பாடினான்.
அதன் பின் ஶ்ரீ தீபக் என்ற college student மிகக் கோர்வையாக தமிழ், கொஞ்சம் ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் தங்கு தடையின்றி "பிள்ளையார் பெருமை" பற்றி குட்டிக் கதைகள், படங்களோடு மிக அழகாக உரைத்தார்.
மூன்றாவதாக நான் சென்னை அருகில் எழுச்சூர் என்ற இடத்தில் உள்ள பழைய சிவன் கோவில் பற்றிப் பேசினேன்.
இந்தக் கோவில் குறித்து திரு ராமசாமி என்ற நண்பர் கூறி இருந்தார். இது முக்கியமாக கணவன் மனைவி, மாமியார் மருமகள், அண்ணன் தம்பி இப்படி உறவுகளுக்குள் நடக்கும் பிரச்சினைகள், மற்றும் சொத்து பிரச்சனைகள் இணக்கமாக தீர்த்து வைப்பதால் இந்த சிவன் நல்லிணக்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள அம்பாள் தெய்வநாயகியின் அருளால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். மற்றும் சங்கீதத்தில் சாதிக்க நினைப்பவர்களும் அம்பாளின் அருளை பெறலாம். வரங்கள் தந்து வேண்டுதல்களும் நிறைவேறும் பிரார்த்தனை தலமாகும்.
நல்லிணக்கேஸ்வரர்_சிவன்_கோவில்
தெய்வநாயகி_ ezhichur
இன்று நாம் பார்க்கப் போகும் கோவில், சென்னையிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தெய்வ நாயகி சமேத நல்லிணக்கேஸ்வரர் என்ற சிவன் கோவிலாகும்.
சென்னையிலிருந்து வாலாஜாபாத் செல்லும் வழியில் படப்பை வழியாக ஒரகடம் தாண்டி சென்றால் எழுச்சூர் கூட்டுரோடு என்ற ஜங்ஷன் வரும். அங்கே இடதுபுறம் திரும்பி உள்ளே செல்ல வேண்டும். மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.
விஜயநகரப் பேரரசர் வீர நரசிம்மர் காஞ்சி காமகோடி பீடம் 54வது பீடாதிபதி வியாசாசல மகா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தானமாக கொடுத்தார் என்று தாமிரப் பட்டய தகவல் சொல்கிறது.
1200 வருடம் முன்பு முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டில் இந்த ஆலயத்தை கற்றளியாக மாற்ற பொன் தானமாக வழங்கப்பட்ட தகவல் உள்ளது.
இதன் சிறப்பைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் ஒரு விஷயம் கேள்விப்பட்டோம்.
ஒரு வேறு மதத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் புதர் மண்டிய இந்த இடத்தைக் கண்டு பிடித்தாராம். காஞ்சி காமகோடி பீடத்தின் உத்தரவின்படி, பக்தர்கள் உதவியோடு முழுமையாக புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் 2012 இல் நடத்தப்பட்டது.
இங்கே உள்ள தெய்வங்களோடு காஞ்சி காமகோடி பீடம் 54வது பீடாதிபதி வியாசாசல மஹாதேவேந்திர சரஸ்வதி
சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது.
இங்கு தல விருட்சமாக சில மரங்கள் உள்ளன. அதில் ஏரழிஞ்சில் என்ற மரத்தின் பழங்கள் மீண்டும் மரத்தின் இடமே சென்று ஒட்டிக் கொள்ளுமாம்.
இங்கே மற்ற தெய்வங்களோடு காலபைரவர், நவகிரக சன்னதியும் உள்ளன.
இப்போது இந்த கோவிலின் சிறப்பை பற்றி திரு ராமமூர்த்தி அவர்கள் வீடியோவில் தெரிவிப்பார்.
இத்துடன் சில புகைப்படங்கள் உள்ளன அதில் அவர் கூறும் விவரங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கீழே படங்களும் வீடியோவும் தந்து உள்ளேன்.
என்னுடன் என் கணவரும் Anandhi Vaithiyanathan உம் வந்தனர்.
தவிர எனக்கு ஒரு ஆசை. Madhyamar யாராவது செய்யுங்கள்.
சென்னையைச் சுற்றியும் கும்பகோணம் போலவே நவகிரக ஸ்தலங்கள் உள்ளன. பலருக்கும் தெரிந்த கோவில்கள் சில மட்டுமே.
மற்றவை அவ்வளவாகத் தெரியாதவை.
நாங்கள் வேறு வேறு நாட்களில் பொதுப் போக்குவரத்து/ ஆட்டோவில் சென்றோம்.
விவரம் குறித்துக் கொள்ளவில்லை. இப்போது யாராவது சென்று கோவில் நேரம், map, எவ்வாறு செல்வது போன்ற விவரங்கள், ஃபோட்டோ, விடியோ எடுத்து வந்தால் நன்றாக இருக்கும்.
சோமங்கலம், கொளப் பாக்கம்,
கெருகம்பாக்கம், கோவூர் போன்றவை கொஞ்சம் interior.
நிச்சயம் காண வேண்டிய திருத்தலங்கள்.(அவற்றின் map, பெயர்கள் ஃபோட்டோ தந்து இருக்கிறேன்)
நான்காவதாக Sudha selvakumar
கம்ப்யூட்டர் சாம்பிராணி செய்வது எப்படி என்று சொல்லித்தந்தார்.
சபா team சேர்ந்த Geethmala Raghavan மற்றும் sujatha krishnamoorthiஅவர்களும் மிகச்சிறப்பாக தொகுத்து வழங்கினர், சபா team உதவியுடன்.
நன்றி, Madhyamar Admin
சங்கர் ராஜரத்தினம்.
நேற்றைய youtube link: Full prog.
https://youtu.be/vcBWNCCLDns
No comments:
Post a Comment