Wednesday, August 24, 2022

ரேடியோ லைசென்ஸ்

 ஒரு காலத்தில் வீட்டில் ரேடியோ வைத்து கொள்வதற்காக ரேடியோ லைசென்ஸ் வாங்க வேண்டும். அதற்கு Domestic Radio Licence என்று பெயர். வருடத்திற்கு ரூ. 15 கட்டணம். 60 களில் ரூ. 10 ஆக இருந்தது. ஒரே வீட்டில் கூட இன்னொரு ரேடியோ அல்லது டிரான்சிஸ்டர் இருந்தால் கூடுதலாக ரூ. 3 கட்ட வேண்டும். தபால் நிலயங்களில் இதற்கான விண்ணப்பம் செய்து லைசென்ஸ் பெற வேண்டும். ஒரு புத்தகம் போல கொடுப்பார்கள். அங்கேயே வருடா வருடம் தொகை கட்ட வேண்டும். 1984 இல் இது விலக்கி கொள்ள பட்டது என்று ஞாபகம்.

இன்னொரு செய்தி. அப்போது "வானொலி" என்ற ஒரு மாதம் இருமுறை பத்திரிகை வரும். சென்னை, திருச்சி, மற்றும் கோவை வானொலி நிலையங்களின் நிகழ்ச்சி நிரல்கள் கொடுக்க பட்டிருக்கும். அடுத்து வர இருக்கும் திரைப்பட ஒலி சித்திரம் ( மாதம் ஒருமுறை ஞாயிறு அன்று மதியம்) மற்றும் நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் ஒலி பரப்பாகும் திரை பாடல்கள் எவை எவை என்று தெறிந்து கொள்ளும் ஆவல் எங்களுக்கு, கர்நாடக இசை கச்சேரிகள் யாருடையது, எப்போது என்று அறிய ஆவல் பெற்றோர்களுக்கு.

பகிர்வு

No comments:

Post a Comment