Tuesday, August 16, 2022

வீட்டு வைத்தியம்

 *_மருந்தில்லாமல் வாழ முன்னோர்கள் சொன்ன மூலிகை வைத்தியம்_* 

உடலில் ஏற்படும் பல வகையான நோய்களை விரட்ட ஆங்கில மருத்துவத்தை நாடி ஆயிரக்கணக்கில் செலவு செய்வோர் சில இயற்கை வைத்தியங்களை பின் பற்றினால் பணத்தை மிச்சப்படுத்தலாம் .

இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றி உடலில் ஏற்படும் சின்ன சின்ன தொந்தரவுகளை சரி செய்யுங்கள் தீராத நெஞ்சு சளியால் அவதிப்படுவோர் தேங்காய் எண்ணையில் சிறிதளவு கற்பூரம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து ஆறியதும் நெஞ்சில் தடவினால் நெஞ்சு சளி பஞ்சாய் பறந்து போகும்


தீராத தலைவலிக்கு 10 துளசி இலை, சிறுதுண்டு சுக்கு மற்றும் 2 லவங்கம் ஆகியவற்றை நன்கு அரைத்து நெற்றியில் பற்றாக போட்டால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் மறையும்

தொண்டையில் கபம் கட்டிக்கொண்டு கரகரப்பாக இருந்தால் கவலை பட்டு ஆங்கில வைத்துக்கு போனால் ஸ்கேன் எடுக்க சொல்லி பர்ஸை பதம் பார்த்து விடுவார்கள் .

இதற்கு சுக்கு, வெள்ளை மிளகு மற்றும் திப்பிலி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் போதும் உடனடி நிவாரணம் உண்டு .

விக்கல் வந்து எதையும் விழுங்க சிரமம்படுவோர் நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிடால் போதும் விக்கல் சுக்கு நூறாகிவிடும்

வாய் துர் நாற்றத்திற்கு சட்டியில் படிகாரத்தை போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்து தினமும் மூன்று வேலை சாப்பிட்டு வந்தால் வாய் மணக்கும் .

பனி காலத்தில் உஷ்ணத்தால் வரும் உதடு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எரித்து சாம்பல் எடுத்து அதை வெண்ணையில் கலந்து உதட்டில் தடவி வந்தால் போதும்

அஜீரண கோளாறால் விருந்தில் கலந்து கொள்ள முடிய வில்லேயே என்று ஏங்குவோர் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பில்லை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றை நன்கு கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி குடித்து விட்டு போனால் விருந்தில் ஒரு கட்டு கட்டலாம்.         கீதா சித்த மருத்துவம்,

No comments:

Post a Comment