Monday, August 15, 2022

மாடியில் இருந்து விழுந்ததும்

 15-8-22

திரு ஸ்ரீனிவாசஐயரின் வாழ்க்கையில் நடந்த இரண்டு பெரிய சம்பவங்களில் இதை தொடர்ச்சிக்காக மீண்டும் பதிவிடுகிறேன்.  

பி.சுவாமிநாதன்--

சென்னைசென்ட்ரலில்இருந்துரயில்மார்க்கமாக திருத்தணி, திருப்பதி சென்றால் திருவள்ளூர் என்கிறரயில் நிறுத்தம் வரும். ஒரு காலத்தில் சாதாரணஊராக இருந்த திருவள்ளூர், இன்று தனி மாவட்டமாக அமைந்துள்ளது.  இங்குள்ளஸ்ரீ வீரராகவ பெருமாள் ஆலயம் வெகு பிரசித்தம்

சுமார் 70,75 ஆண்டுகளுக்கு முன்னே திருவள்ளூ ரில் ராமசந்திர ஐயர் என்பவர் வசித்து வந்தார். மிகவும் பிரபலமான வக்கீல். நேர்மை ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு வக்கீல் தொழிலை அமோகமாக நடத்தியவர். இதனால்

நீதிபதிகளாலும் சக வக்கீல்களாலுமே மிகவும்மதிக்கப்பட்டார் ராமசந்திர ஐயர். பூஜை – புனஸ்காரம், ஆசாரம் போன்ற எல்லாவற்றிலும் தேர்ந்தவர். 

மகா பெரியவா மீதுஅலாதியான பக்தி கொண்டவர்.திருவள்ளூரில் இவரது கிரஹத்துக்கு மகா பெரியவா விஜயம் செய்து,தொடர்ந்து தங்கி, பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு ஆசி வழங்கிஇருக்கிறார். 'நீதி தவறாத சத்தியவான்' என்று பெரியவாளின் வாயாலேயேஅருளப் பட்டவர் ராமசந்திர ஐயர்.

ராமசந்திர ஐயரது பேத்தியின் கணவர் திருவள்ளூர் ராமசந்திர ஐயரின் மாப்பிள்ளை சீனிவாசஐயர், சீனிவாச ஐயருக்கு ஐந்து மகன்கள். இரண்டு மகள்.

இவர்களில் மூத்த மகன் சுந்தர்ராமன், தற்போது பெரம்பூரில் வசித்து வருகிறார்.எழுபதைக் கடந்தவர். 1960 -களின் துவக்கத்தில் சீனிவாச ஐயரின் குடும்பம் பழைய மாம்பலத்தில் வசித்து வந்தது. இரண்டு மாடிகள் கொண்டது குடியிருப்பு. ஒரு நாள் அதன் மூன்றாவது மொட்டை மாடியில் துணிகள் உலர்த்துவகென்று சீனிவாச ஐயரின் மகன்களான சிவகுமாரும், விசாகனும் ஈரத் துணிகளை கொண்டு மொட்டை மாடிக்குச்சென்றனர்.

விசாகனுக்கு அப்போது மூன்றரைவயது.' சிவகுமார் துணிகளை உலர்த்திக்கொண்டிருந்த போது குழந்தையான விசாகன், அப்போது மொட்டைமாடி கைப்பிடிச் சுவருக்கு அருகே நின்று, கால்களால் எம்பி, எம்பி, வேடிக்கைபார்த்திருக்கிறான். அந்த வேளையில் சீனிவாச ஐயரின் சகோதரியும்,விசாகனின் அத்தையும் ஆனவர் ஒரு காரில் வந்திருக்கிறார். ‘அத்தே கார்ல வர்றா... அத்தே கார்ல வர்றா'.. என்று சந்தோஷப்பட்டு கைகளைத் தட்டி மொட்டை மாடியில் கைப்பிடிச்சுவர் அருகே எகிறிக்குதித்த விசாகன் சட்டென்று நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டான்.

ஓரளவுக்கு விவரம் அறிந்த சிவகுமார் பதறிப் போய்விட்டான்.  கீழே வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த விசாகனின் தாயார், அலறிப்புடைத்துக்கொண்டு சமையல்கட்டில் இருந்துவெளியே ஓடோடி வந்தார். மூன்றாவது மாடியில் இருந்தவிழுந்த விசாகன், விழுகிற வேகத்தில் அங்கிருந்த எலுமிச்சைமரத்தின் கிளைகளில் உடல் பட்டு, ஆங்காங்கே அதன்முட்கள்கிழித்து, ரத்தக் காயங்களுடன் கீழே கிடந்தான். அக்கம்பக்கத்தில் வசித்து வந்த அனைவரும்'ஐயையோ... குழந்தைக்கு என்ன ஆச்சோ' என்கிற பீதியில் விசாகனின் தாயாருக்கு உதவவந்தனர். கீழே விழுந்த பிறகு விசாகனின் நினைவு தவறிப் போய்கிட்டது. அவனிடம் இருந்து ஒரு பேச்சும் இல்லை. தாயாருக்கு இது இன்னமும் கவலையைக் கூட்டியது.

அங்கு இருந்தவர்கள் சட்டென்று விசாகனை ராயப்பேட்டைஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போக ஏற்பாடுசெய்தார்கள். அங்கே ஐ.சி.யூ-வில் விசாகனை அனுமதித்தனர். எக்ஸ்ரே போன்றசோதனைகள் மளமளவென்று நடந்தன. விசாகனின் அப்பாவுக்கு போனில் தகவல் போய் அவரும் ஆஸ்பத்திரிக்குக் கண்ணீரும் கம்பலையுமாக ஓடிவந்தார். 'மகனுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது. அவன் உயிர் பிழைச்சுடணும்' என்று மகாஸ்வாமிகளை ஆஸ்பத்திரியில் இருந்தபடியே பிரார்த்தித்துக் கொண்டனர் சீனிவாச ஐயரும் அவரது மனைவியும்.

அப்போது மணி சுமார் காலை பதினொன்று இருக்கும். விசாகனுக்கு சிகிச்சை மேற் கொண்டிருக்கும் மருத்துவர்களும் நர்ஸுகளும் திரைப்படத்தில் வருவது போல் குறுக்கும் நெடுக்கும் பதறியபடி ஓடிக்கொண்டிருந்தார் களே தவிர, எந்த ஒரு நல்ல தகவலையும் சொல்லவில்லை. 'விசாகனுக்கு இன்னும் நினைவு திரும்ப வில்லை’என்பதே அவர்கள் கடைசியாகச் சொன்ன தகவல்.

இதேவேளையில் காஞ்சி சங்கரமடத்தில் ஸ்ரீமகா பெரியவாசந்நிதியில் நடந்த அதிசயத்தைப் பார்ப்போம்.

சீனிவாச ஐயர் வசிக்கும் அதே பழைய மாம்பலம் தெருவிலேயே அவரது வீட்டுக்கு ஓரிரு வீடுகள் தள்ளி ஹரிஹர ஐயர் என்பவர் வசித்து வந்தார். இவரும் மகா பெரியவாளின் அத்யந்த பக்தர். அடிக்கடி காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் போய் பெரியவாளை ஏகாந்தமாக தரிசனம் செய்து விட்டுவருவது வழக்கம்.அன்றைய தினமும் பெரியவா தரிசனம் முடித்தபின் சந்திரமௌலீஸ்வரர் பூஜையைப் பார்த்து தரிசிக்கஸ்ரீமடத்தில் அமர்ந்திருந்தார்

ஐயர், அப்போது திடுமென ஹரிஹர ஐயரிடம் வந்த ஒரு சிஷ்யன்.

"மாமா... பெரியவா ஒங்களைக் கையோட, கூட்டிண்டு வரச் சொல்றா" என்றான்." ஆஹா... பாக்கியம்'' என்றபடி எழுந்து பெரியவா அருகே சென்றார் ஹரிஹர ஐயர்,'பெரியவாளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விட்டு அவரதுஉத்தரவுக்காகக் காத்திருந்தார்.

"திருவள்ளூர் ராமச்சந்திர ஐயரோட மாப்பிள்ளை சீனிவாச ஐயர் உங்காத்துக்குப் பக்கத்துலதானே இருக்கார்?"

"ஆமா பெரியவா...

"அவாகிட்ட சேர்ப்பிக்க வேண்டிய பிரசாதத்தை ஒம் மூலமா கொடுக்கறேன். ஒடனே அவாகிட்ட சேரணும்.." என்ற“பெரியவா,  ஒரு ருத்திராட்ச மாலையையும், ஒரு காகிதத்தில் விபூதியும் கொடுத்தார். அதைத் தன் கையில் வாங்கிக் கொண்டஹரிஹர ஐயர், "கண்டிப்பா சேத்துடறேன் பெரியவா. ஆனா, சந்திரமௌலீஸ்வர பூஜை முடிஞ்சப்புறம் நான் பொறப்படலாமோல்லியோ?”என்று கேட்டார்.

"இல்லையில்லை. ஒடனே சேரணும். இந்தா, தீர்த்தம்வாங்கிண்டு நீ இப்பவே மெட்ராஸ் பொறப்படு" என்று உத்தரவாகச் சொன்னார் பெரியவா.வெளியே வந்த ஹரிஹர ஐயருக்கு என்னென்னவோ சிந்தனை. 'ஏன் இந்தப் பிரசாதத்தை இவ்வளவு அவசரம்அவசரமாகக் கொடுக்க வேண்டும். பூஜையை முழுசாக என்னைப் பார்க்க விடவில்லையே? சரி, பெரியவா சொன்னால்,எதற்கும் ஒரு காரணம் இருக்கும்' என்றபடி மனதைத் தேற்றிக்கொண்டவர், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்து,சென்னைசெல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தார். மதியம் மணி பன்னிரண்டரையைத் தாண்டி இருந்தது. அலுப்பின்காரணமாகவும் பயண சுகத்தின் காரணமாகவும் லேசானஉறக்கத்தில் ஆழ்ந்தார் ஹரிஹர ஐயர்.

சென்னைக்கு வரும் பேருந்தில் ஹரிஹர ஐயர் பயணம்செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ராயப்பேட்டை மருத்துவ மனையில் என்ன நடக்கிறது என்று பார்த்துவிடுவோமா? !

ஐயரின் குடும்பமே பதைபதைப்புடன் ஆஸ்பத்திரியில்காத்திருந்தது.    மருத்துவர்கள், பாதிக்கப்பட்டது ஒரு குழந்தை என்பதால், மருத்துவர் குழு கூடுதல் கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொண்டு அவசர சிகிச்சையில் இறங்கினர்.சீனிவாச ஐயரையும் அவர் குடும்பத்தில் உள்ள முக்கியமான ஓரிருவரை மட்டும் தன் அறைக்கு அழைத்த அந்தத் தலைமை மருத்துவர், “பயப்படும்படியாக ஒன்றும் இல்லை. எவரும் கவலைப்படத் தேவை இல்லை. மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்திருந்தாலும்,குழந்தைக்கு எந்த விதமான உள்காயமோ, ஒரு சின்ன எலும்புமுறிவோகூட இல்லை. இது எப்படி என்றுதான் எங்களது குழுவினருடன் மிகுந்த ஆச்சரியமாகப் பேசிக் கொண்டிருக்கி றோம். சாதாரணமாகஇது போன்ற உயரத்தில் இருந்து விழுந்தால், ஒரு குழந்தை உயிர் பிழைப்பதே அரிது. அப்படி இருக்கும்போது உங்களது குழந்தை எந்தவிதமான காயமும் இல்லாமல் காப்பாற்றப் பட்டது, ஏதோ ஒரு அபூர்வசக்தியால்தான் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்” என்றார்.

அவர் முகத்தில் இருந்த ஆச்சரியம் இன்னும் விலகவில்லை என்பதை முகம் உணர்த்தியது.

உடன் இருந்த பிற மருத்துவர்களும் தலைமை டாக்டரின் இந்தக்கருத்தை ஆமோதித்தனர்.

சீனிவாச ஐயரும் உடன் இருந்தவர்களும் விசாகனைக் காப்பாற்றிய அந்த தெய்வ சக்திக்கு மனதார நன்றி சொன்னார்கள்.

கூடவே, அந்தத் தலைமை டாக்டர் இறுதியாகச் சொன்ன ஒருதகவல் சீனிவாச ஐயரையும், அவரது குடும்பத்தின ரையும் கவலைப்பட வைத்தது. "எல்லாம் ஓகே என்றாலும், குழந்தை இன்னும் கண்திறக்க வில்லை. சுய நினைவை இன்னும் அவன் எட்டவில்லை. அவன் கண் விழித்தால்தான், அடுத்த கட்டம் என்ன என்று தீர்மானிக்க முடியும். தெளிவாக எதையும் சொல்ல முடியும்” என்றார்.

“டாக்டர்... எங்க குடும்பத்துக்கே தெய்வ பக்தி அதிகம் உண்டு.

அதைவிட, காஞ்சி மகா பெரியவாளோட அனுக்ரஹம் எங்க குடும்பத்துக்கு பரிபூரணமா இருக்கு. குழந்தைக்கு ஒண்ணும் ஆகாதுன்னு நம்பறோம். அவன் சீக்கிரம் கண் திறந்து எங்களை பார்க்கணும்னு உங்ககிட்ட ரொம்ப வேண்டிக்கிறோம்” என்று கண்ணீர்விட்டார் சீனிவாச ஐயர்.

எல்லாம்"கூல் கூல்... தெய்வ சக்தியால முடியாதது எதுவுமே இல்லைதான். இருந்தாலும், உங்க பையன் கண் திறந்து பார்க்கிற வரை நாங்க எதுவும்சொல்ல முடியாது. வெயிட் பண்ணுவோம். நீங்க எல்லாருமேஅமைதியா இருங்க”என்று சொன்னார். பேருந்தில் இருந்து இறங்கிய ஹரிஹரஐயர்,பழைய மாம்பலத்தில் உள்ள தன்வீட்டை நோக்கி வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார். 

தன் வீட்டுக்குச் செல்வதற்கு முன் மகா பெரியவா கொடுத்த பிரசாதத்தை சீனிவாச ஐயரின் வீட்டில் கொடுத்து விடலாமே என்று வீடு இருக்கும் காம்பௌண்டுக்குள் நுழைந்தார்.'அவர்மணியை அழுத்தலாம் என்று போனவர் அப்போதுதான் கவனித்தார் - வீடு பூட்டப்பட்டிருந்தது. சாதாரணமாக இந்த நேரத்தில் வீடு பூட்டப் பட்டிருக்காதே'என்று யோசித்த ஹரிஹர ஐயர், பக்கத்து வீட்டில் விசாரித்தபோதுதான் விவரம் அறிந்தார். துணுக்குற்றுப்போனார். அவசரம் அவசரமாக மகா பெரியவா ஏன் தன்னிடம் பிரசாதம் தந்து அனுப்பினார் என்று நீண்ட நேரமாக அவரது மண்டையைக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு இப்போது விடை தெரிந்து விட்டது.

கிடைத்த ஏதோ ஒரு வாகனத்தில் தன் அவசரம் சொல்லி, ராயப்பேட்டைக்கு விட்டார் சவாரி!

மாலை சுமார் நான்கு மணி இருக்கும்.  பரபரவென்று ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார் ஹரிஹர ஐயர். விசாகன் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டு எது என்பதை விசாரித்து,நேராக சீனிவாச ஐயரிடம் சென்றார் ஹரிஹரன்.

தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள இவர், தகவல் தெரிந்து குழந்தையைப் பார்க்க வந்திருக்கிறார் போலிருக்கிறது என்றுதான்சீனிவாச ஐயரின் குடும்பம் முதலில் நினைத்தது. தான், காஞ்சிபுரம் சென்ற விவரத்தையும், தரிசனம் பூர்த்தி பெறாத நிலை யில் பாதியிலேயே தன்னை அழைத்து மகா பெரியவா பிரசாதம் கொடுத்துஅனுப்பிய தையும் சுருக்கமாகச் சொன்னார் ஹரிஹரன்.

மகா பெரியவாளின் பெயர் உச்சரித்த மாத்திரத்தில், அதுவரை அந்தக் குடும்பத்தினரிடம் இருந்த கவலை எப்படித்தான் ஓடி மறைந்தது என்று தெரியவில்லை. தன் மகன் இருக்கும் சோகமான நிலையை மறந்து, ஹரிஹர ஐயரிடம், “என்ன சொன்னார் மகா பெரியவா"என்று மீண்டும் மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தார் சீனிவாச ஐயர்.

"ஒண்ணும் கவலை வேண்டாம். அந்தப் பரப்பிரம்மம் எல்லாம் தெரிஞ்சுதான் எங்கிட்ட பிரசாதம் கொடுத்து அனுப்பிஇருக்கார்.

பெரியவா கொடுத்த விபூதியை அவன் நெத்தியில் இட்டு விடணும். இந்த ருத்திராட்சத்தை அவன் தலைமாட்டுல வெச்சுடுவோம். மிச்சதை பெரியவாளே பாத்துப்பார்"என்றார் ஹரிஹர ஐயர்.

அனைவருக்கும் இதைக்கேட்பதற்கே சந்தோஷமாக இருந்தது.

தலைமை மருத்துவர் அறைக்குஓடினார் சீனிவாச ஐயர். காஞ்சிமடத்தில் இருந்து பிரசாதம்வந்திருக்கும் விவரத்தைச் சொன்னார். "நாங்க தெய்வமா மதிக்கிற குருநாதர்கிட்டேர்ந்து பிரசாதம்வந்திருக்கு. இதை உடனே அவனுக்குஇட்டுவிடணும். அதுக்காக எங்களை ஐ.சி.யூ-வுக்குள்ளே அனுமதிக்கணும்''என்றுவேண்டினார். முதலில்இதற்குஅனுமதி மறுத்தார் அந்தத்தலைமை மருத்துவர். பிறகு, இவர்களது பிடிவாதம் தளராமல்இருக்கவே, ஹரிஹர ஐயரையும்,சீனிவாச ஐயரையும் மட்டும் சிலநிபந்தனை களுடன் உள்ளே அனுமதித்தார்.

‘ஜய ஜய சங்கர’ ஸ்லோகத்தை மனதுக்குள் துதித்துக் கொண்டேஇருவரும் ஐ.சி.யூ-வுக்குள் நுழைந்தனர் விசாகன துவண்டு போய், பெட்'டில் படுத்திருந்தது தந்தையார் சீனிவாச ஐயருக்கும், ஹரிஹர ஐயருக்கும் 'கண்ணீரையே வரவழைத்தது.

அதிக நேரம் இங்கே இருக்கக் கூடாது' என்று அங்குபணியில் இருந்த செவிலியர்கள் சொன்னதன்பேரில், தன் கையில் வைத்திருந்த விபூதியை, மகா பெரியவாளை துதித்துக்கொண்டே விசாகனின் நெற்றியில் இட்டு விட்டார். அந்த ருத்திராட்சத்தை அவன் தலைமாட்டில் தலைகாணிக்கு அடியே வைத்தார். இருவரும் வெளியே வந்தனர்.

என்னே ஆச்சரியம்! இவர்கள் இருவரும் வெளியே வந்தஅடுத்த விநாடி, அந்த அற்புதம் நடந்தது. விசாகன் பொசுக்கென்று கண்விழித்து விட்டான்.

செவிலியர்கள் ஓடிப் போய் தலைமை மருத்துவரிடம் தெரிவித்தனர்.

"ஈஸ் இட்?" என்றுபுருவம்உயர்த்திய அந்தத் தலைமை

மருத்துவர், ஐ.சி.யூ-வுக்குள் விரைந்தார். இந்த சந்தோஷமான விஷயத்தைக் கேள்விப்பட்ட சீனிவாச ஐயர்,"பார்த்தேளா, பெரியவா கொடுத்த விபூதியோட மகிமையை..."என்று குரல் தழுதழுக்க எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந் தார்.இயல்பான நிலையில் இருக்கும் விசாகனை எல்லோரும் வந்து பார்க்கலாம் என்று அழைப்பு வந்தது. குடும்பத்தினர்

உட்பட அனைவரும் ஒன்று திரண்டு உள்ளே நுழைந்தனர்.

தலைமை மருத்துவர் ஸ்டெதெஸ்கோப்பை வைத்து,அவனைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். எல்லோரையும் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தது குழந்தை.“அப்பா.." என்றான், சீனிவாச ஐயரைப் பார்த்து. விசாகனைப் பார்த்து தலைமை மருத்துவர் கேட்டார்:

“விசாகா... மாடியில் இருந்து கீழ விழுந்தியே... அப்ப என்னநடந்தது?'

தலைமை மருத்துவரின் இந்தக் கேள்விக்கு விசாகன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள அனைவரும் அவன் முகத்தையே ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.மூன்றாவது தளத்தில் இருந்து தரையில் விழுந்த விசாகனுக்கு,விபத்துக்கு முன் நடந்தது என்ன என்பது ஸ்மரணையில் இருக்கிறதா...

தவிர, பழைய நினைவுகள் அப்படியே அவனுக்குள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளவே இந்தக் கேள்வியை அவனிடம் கேட்டார் தலைமை மருத்துவர்..

தன்னைச் சுற்றி ஓர் அரை வட்டம் போல் சூழ்ந்திருக்கும் அனைவரையும் ஒரு முறை மலங்க மலங்கப் பார்த்தான் விசாகன்.

பிறகு, தலைமை மருத்துவரைப் பார்த்து, “மாடிலேர்ந்து விழுந்தேனா..."என்று குழந்தைத்தனமாக விசாகன் இயல்பாகப் பேச ஆரம்பிக்க...

"ம்ம்... சொல்லு. மேலே என்ன நடந்ததுன்னு சொல்லு” என்றுபூரிப்பானார் தலைமை மருத்துவர்.

"நான் கீழே விழும்போது காஞ்சிபுரம் உம்மாச்சி தாத்தா என்னை ரெண்டு கையாலயும் அப்படியே தாங்கிப் பிடிச்சுண்டார். பிறகு எறக்கிவிட்டுட்டுப் போயிட்டார்" என்றான்.

தலைமை மருத்துவர் அதிசயப்பட்டார். சீனிவாசஐயர் உட்பட விசாகனது குடும்பத்தினர் அனைவரும் பிரமித்துப் போய் நின்றனர்.

அப்போது சீனிவாசஐயர் தன் கைப்பையில் இருந்த மகா பெரியவா ஒஒபடம் ஒன்றை எடுத்து, எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் விசாகனிடம் நீட்ட, "ஆமாம்ப்பா... இந்த தாத்தாதான் என்னைப் பிடிச்சுண்டார்" என்றான்.மருத்துவரைப் பார்த்து சீனிவாச ஐயர், "டாக்டர்,அவன் சொல்றது வாஸ்தவமாத்தான் இருக்கும். எங்க குடும்பத்துக்கே.. கண்கண்ட தெய்வம் அந்த காஞ்சிசுவாமிகள் தான்.. அவரோட அனுக்ரஹம் தான் விசாகனைக் காப்பாத்தி இருக்கு. இல்லேன்னா மூணாவது மாடிலேர்ந்து விழுந்த ஒரு குழந்தை உடம்புல ஒரு அடிகூட படாம இருக்குமா?நீங்க எத்தனை கேஸ் பார்த்திருப்பேள்?

எங்கேயானும் இது சாத்தியமா?!"  என்று கேட்கும்போது, மகா பெரியவாமீதுகொண்ட பக்தியின்வெளிப்பாட்டால் அவரது கண்களில்,இருந்து நீர்த்துளிகள் வெளிப்பட்டன.

விசாகனின்கன்னத்தைச் செல்லமாகத் தடவிக் கொடுத்து விட்டு, “லக்கி பாய்" என்றுசொல்லி விட்டுவெளியேறினார் தலைமை மருத்துவர்.அவரது மருத்துவக் குழுவில் இருந்த ஒவ்வொருவரும் அவனைப் பிரமிப்புடன் பார்த்து விட்டுத் தலைமை மருத்துவரைப் பின் தொடர்ந்தார்கள்.

இதை அடுத்து வந்த ஓரிரு நாட்களில் விசாகன்' 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டான்.

நாட்கள் ஓடின. இயல்பு நிலைக்கு மகன் விசாகன் திரும்பிய பிறகு காஞ்சிபுரம் மகா பெரியவாளிடம் ஆசி வாங்கிவருவதற் காக ஒரு நாள் அவனைக் கூட்டிக் கொண்டு போனார் சீனிவாச ஐயர்.

பெரியவா தரிசனத்துக்காக அன்றைய தினம் கூட்டம் அதிகம் இருந்தது. 'திருவள்ளூர் ராமசந்திர ஐயர் குடும்பத்தில் இருந்துபெரியவாளை தரிசனம் செய்ய வந்திருக்கிறார்கள்' என்கிற தகவல் வந்ததும்,சீனிவாச ஐயர் குடும்பத்தினரைத் தன் அருகே வரவழைத்து அமர வைத்துப்பேசிக் கொண்டிருந்தார் பெரியவா. அப்போது, விசாகன்மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததையும், பெரியவா வந்து அவனைத் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றிய சம்பவத்தையும்

தழுதழுக்கும் குரலில் சொன்னார் சீனிவாச ஐயர். அங்கு கூடி இருந்தபக்தர்கள் பலரும் கேட்டு மெய்சிலிர்த்தனர். ஆனால், இதற்கு பதிலாக பெரியவா என்ன சொன்னார் தெரியுமா?

தன் எதிரில் அமர்ந்திருக் கும் ஸ்ரீமடத்துக் காரியதரிசிகளையும்,முக்கியஸ்தர்களையும் பார்த்து, "என்னமோ சொல்றான் பாரு...

மாடிலேர்ந்து இந்தப் புள்ளையாண்டன் விழுந்தானாம்... நான் அவனைப் பிடிச்சேனாம்” என்று குரல் உயர்த்திச் சொல்லி சிரித்தார்.

எத்தனையோ பேருக்கு எத்தனையோ நன்மைகளைப் பல ரூபங்களில்தோன்றி மகா பெரியவா செய்திருக்கிறார். அந்த மகானோடு நெருங்கிய தொடர்புடைய அன்பர்களுக்கு மட்டும்தான் இது தெரியும். ஆனால், என்றைக்கும் அதை பிரபல்யப்படுத்திப் பேசவே மாட்டார் மகான்.

அதுதான் பெரியவா!

ஜெய ஜெய சங்கரா!ஹர ஹர சங்கரா!!

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

கரை காணமுடியாத கருணை பெருங் கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.'🌹🙏

"எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே.

No comments:

Post a Comment