வெற்றிலை ரசம் -----------------------------சளி, இருமலுக்கு இதமான வெற்றிலை ரசம்...!
தற்போது ஆங்காங்கே பெய்யும் மழையால் பலருக்கும் சளித்தொல்லை பரவலாக உள்ளது. சாதாரண சளியை முறையான உணவிலேயே கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. சீரகம், மிளகு, மஞ்சள் போன்றவை வெறும் மசாலா பொருட்களாக இருப்பது மட்டுமின்றி, மருத்துவ நன்மைகளையும் அளிக்கிறது. அதேவேளையில் தாம்பூலமாக பயன்படுத்தக்கூடிய வெற்றிலையிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே, சளி, இருமலுக்கு இதமான வெற்றிலை ரசம் வைக்கும் வழிமுறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எப்படிச் செய்வது?
இடிகல்லில் சீரகம், மிளகை கொர கொரப்பாக இடிக்கவும். பின், பூண்டு, இஞ்சியையும் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும். கல்லில் அரைக்கும் போது பாரம்பரிய ருசி கிடைக்கும். எனவே, இடிகல் இல்லாவிட்டால் மிக்சி ஜாரில் கொரகொரப்பாக அரைக்கலாம். ஊறவைத்த புளியை சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். பின், தக்காளியையும் சேர்த்து நன்றாக பிசைந்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் காய்ந்ததும், கடுகு போட்டு பொரிந்தவுடன், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அரைத்த சீரகம் மற்றும் பூண்டு விழுது, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கிளறு கிளறவும். பின், புளிக்கரைசல், சிறு துண்டுகளாக்கிய வெற்றிலை, நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து மிதமான தணலில் கொதிக்கவிடவும்.
நுரை கட்டிய நிலையில் கொதிக்கத் துவங்கிய உடனேயே அடுப்பை அணைத்து விடவும். இப்போது இருமலுக்கு இதமான வெற்றிலை ரசம் தயார். ரசம் மிகவும் கொதித்துவிட்டால் ருசி குறைய வாய்ப்புள்ளது.
வெற்றிலையின் பயன்கள்
வெற்றிலையில், கால்சியம், இரும்பு, புரதம், அயோடின், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி, ஏ, பி1 மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்கள் அளவிட முடியாதது.
இருமல், ஆஸ்துமா, தலைவலி, நாசியழற்சி, மூட்டு வலி மற்றும் பசியின்மை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.
வெற்றிலையில் உள்ள ஆன்டிபயாடிக் பண்புகள் இருமல் மற்றும் சளி ஆகியவற்றைப் போக்க உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப் படுத்துவதால் நீரிழிவு பிரச்னைக்கு தீர்வாகிறது.
உடலில் உள்ள எல்.டி.எல்., என்ற கெட்ட கொழுப்புகளை கரைத்து கழிவுகளாக வெளியேற்றுகிறது. இதனால் பக்கவாதம், இதய நோய் தொடர்பான பிரச்னைகளில் இருந்து தப்பிக்க உதவுகிறது. மேலும், உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் எடையை குறைக்கவும் வெற்றிலை உதவுகிறது.
No comments:
Post a Comment