Wednesday, August 17, 2022

தாயுமானவ(ள்)-(ன்)

 தாயுமானவ(ள்)-(ன்) -

வெங்கட்ராமன் என்கிற வெங்கி குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கத்தை சார்ந்த குடும்பம். அவன் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். தன்னுடைய வேலையில் அதிகம் கவனம் செலுத்தும் அவன் வீட்டு வேலைகளை அவன் மனைவி கமலி தான் பார்த்துகொள்வாள். மளிகை சாமான்கள், காய்கறிகள் மற்றும் வீட்டு செலவுக்கு, தனது மாத சம்பளத்தை மனைவியிடம் கொடுத்து விடுவான். எவ்வளவு செலவாயிற்று, மீதம் எவ்வளவு உள்ளது என்று அவன் ஒரு நாளும் மனைவியை கேட்டதில்லை. தன மனவிக்கு தெரியாததா தனக்கு தெரியபோகிறது என்று எண்ணுவான். வருடங்களும் உருண்டோடின. மகனை நன்கு படிக்கவைத்து இன்று அவன் ஒரு software கம்பெனியல் சேர்ந்து, தனது சொந்த காலில் நிற்க ஆரம்பித்து விட்டான். மகளையும் தான் சேர்த்து வைத்த பணத்தில் ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைத்தான். இவ்வாறு தந்தையாக தனது கடமைகளை முடித்த  வெங்கி , இன்று   ஒய்வு பெற்று விட்டான்.

கடன்களை அடைத்த மீதி இருந்த பணத்தை, வங்கியில் சேமிப்பில் இட்டு, அதில் வரும் வட்டியை வைத்து, வெங்கியும் கமலியும் வாழ்க்கையை ஓட்ட தொடங்கினார்கள். அவனுக்கு ஒரு எண்ணம். வரும் வட்டி மாத செலவிற்கே சரியாக போகிறதே? அத்தியாவஷ்ய செலவுகள் வந்தால், தன் மகன், மகளிடம்  கேட்காமல் எவ்வாறு சமாளிப்பது என்று?

ஒரு நாள் அவன் மனைவி கமலியிடம் காற்று வாங்க சற்று நேரம் வெளியே போயிட்டு வருவதாக கூற, உள்ளே சென்ற கமலி, திரும்பி வந்து அவனிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டை கொடுத்து, “தேவைபட்டால் ஒரு காபி வாங்கி குடித்து கொள்ளுங்கள்” என்று கூறினாள். ரூபாயை வாங்க வெங்கி தயங்கினான். தயங்கிய வெங்கியை பார்த்த கமலி “நீங்கள் மனதில் எந்த சிந்தனையுடன் இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். நான் உங்களுக்கு கொடுத்த நூறு ரூபாய், வங்கியில் இருந்த வந்த வட்டி பணத்தில்  இல்லை. நீங்கள் வேலையில் இருக்கும் போது, எனக்கு மாத செலவுக்கு என்று கொடுத்த பணத்தில், மீதி இருந்த பணத்தை சேமித்து வந்தேன். நீங்களும் அதை பற்றி கேட்டதே இல்லை. அவ்வாறு சிறுக சிறுக சேமித்த பணம் ஒரு கணிசமான அளவு உயர்ந்தது. . நமது வயதான காலத்தில், நமக்கு ஏதேனும் அவசர தேவைபட்டாலும், நமக்கு கிடைக்கும் வருமானம் போதவில்லை என்றாலும். நாம் மற்றவர் கையை எதிர் பார்க்கும் நிலை வரக்கூடாது என்று எண்ணி அன்றே சேமிக்க தொடங்கினேன். கடவுள் அருளால், நோய் நொடி இல்லாமல், நாம் யாருக்கும் பரமாக இல்லாமல் நமது வாழ் நாளை கழிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த சேமித்த பணத்தில் இருந்து தான் நான் இந்த ரூபாயை கொடுத்தேன்” என்று கூறினாள். தனது மனைவி கமலியை வியப்புடன் பார்த்த வெங்கி மனதில் ஒரு இனம் புரியாத அமைதி. பல் வேறு சிந்தனைகளுடன் கிளம்பிய அவன், இப்பொழுது சந்தோஷமாக சென்றிருக்கிறான்.

குடும்ப பாரத்தை சுமக்கும் போது கணவன் “தாயுமானவன்” ஆகிறான். அந்த பாரம் சாயாமல் குடும்பத்தை நடத்தி, வயதான காலத்தில் கணவனுக்கும் துணையாக இருக்கும்போது மனைவி “தாயுமானவள்” ஆகிறாள்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment