#பிரம்ம_கமலம்🙏
பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் அபூர்வமான மலர் இது. (கமலம் =தாமரை)
இரவில் மலர்ந்து சூரியன் வரும் முன்முன் வாடி விடும்!தன்மையுடையது *பிரம்ம கமலம். இதன் நறுமணம் மயக்கும் மணம் உடையது. Queen of the night, Lady of the night என்று ஆங்கிலத்திலும் #Epiphyllum_ Oxypetatum என்ற தாவரவியல் பெயரும் கொண்டது இது.
பிரம்மாவுக்கு உகந்தப் பூவாக கருதப்படும் இந்தப் பிரம்மகமலம் பூ மிகவும் அரிதானது. வருடத்துக்கு ஒரு முறை இரவு 10 மணிக்கு பூக்கும். காலை 5 மணிக்கு முழுவதுமாக வாடி, பூ இருந்ததற்கான அடையாளங்களே இல்லாமல் போய்விடும் தன்மையுடையது. இந்த அதிசய பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போலவே இருக்கும். அதன் வாசம் மிக அருமையாக இருக்கும். சந்தனம் கலந்த பூவின் வாசம் அது.
ஒரு செடியை வளர்க்க வேண்டும் என்றால், அதன் விதை அல்லது கிளையை நட்டு வைக்க வேண்டும். ஆனால், இந்த பிரம்ம கமலம் செடியில் இருக்கும் ஒரு இலையை பிடுங்கி நிலத்தில் நட்டுவைத்தாலே அது செடியாக மாறும் அதிசய திறன் கொண்டது. இலைகளே வளரும். கணுக்களுக்களாக செயல்பட்டு, நிலத்தில் வேர் விட்டு வளர்கிறது. இந்தச் செடிக்கு அதிக தண்ணீர் தேவை இல்லை. காரணம் இந்தச் செடி கள்ளி வகையைச் சேர்ந்தது. குறைந்தத் தண்ணீரில் கூட அழகாக வளரும் தன்மையுடையது.
பிரம்மகமலம் செடியானது கொடியாகப் படரும்; இக்கொடியில் பூக்கும் பூக்கள் பார்க்க நட்சத்திரம் போன்ற தோற்றத்தில். காணப்படும்; அளவில் பெரியதாகப் பளிச்சிடும் வெண்மை நிறத்தில் காட்சியளிக்கிறது; இதன் மணம் எட்டு ஊர்களுக்கு வீசும் என்கிறார்கள்; மேலும் அந்த மணம் ஒருவித மன அமைதியை கொடுக்குமாம்.
Benzyl Salicylate என்ற வேதிப்பொருள் தான் பூவின் மணத்துக்குக் காரணம்.
இரவு நேரங்களில் மலர்வதால் மகரந்தச் சேர்க்கைக்கான பூச்சிகளை ஈர்க்கவே அதன் மணம் உதவும். மேலும், இரவிலும் பளிச்சிடும் அதன் வெண்மை நிறம் பூச்சிகளை தன்பால் ஈர்க்க வல்லது. இது மலரும் இடத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும்! என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. பிரம்மனின் நாபிக் கமலத்தில் இருந்து பூ தோன்றுவதுபோல தோற்ற மளிப்பதால் இதற்கு "பிரம்மகமலம்" எனப் பெயர் பெற்றதாம்.
மேலும், ஜப்பானியர்கள் இந்த மலரை தங்கள் அதிர்ஷ்டத்தின் வழியாகவும், 'பியூட்டி அண்டர்தி மூன்' எனவும் அழைக்கிறார்கள். இமயமலைப் பகுதிகளில் மட்டுமே காணக்கிடைக்கும் இந்தப் பிரம்ம கமலம் என்ற தாவரத்தைத் தற்பொழுது தமிழகத்திலும் சிலர் ஆர்வத்துடன் வளர்க்கின்றனர் என்பது மகிழ்ச்சியே. 🙏
No comments:
Post a Comment