கும்பகோணம் கடப்பா*
*🪀செய்முறை*
🪀பயத்தம்பருப்பைக் கழுவி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து, ஊற வைத்த பட்டாணியும் சேர்த்து குழைந்து விடாமல் வேகவைக்கவும்.
🪀அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.
🪀வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கி, வெந்த பருப்புக் கலவையை சேர்த்துக் கொதிக்கவிடவும்.
🪀ஒரு கொதி வந்த பிறகு அரைத்து வைத்த விழுது, வறுத்துப் பொடித்த மசாலா பொடி சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
🪀தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
🪀இது, இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.
*பகிர்வு🪀*
*golden🕐*
*🪀கும்பகோணம் கடப்பா செய்ய*
*தேவையானவை*
பயத்தம்பருப்பு - 100 கிராம்,
கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா ஒன்று,
பூண்டு - 4 பல்,
காய்ந்த பட்டாணி - 25 கிராம் (ஊற வைக்க வும்),
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கசகசா, பட்டை, சோம்பு, கிராம்பு, பிரிஞ்சி இலை ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்த பொடி - ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
*🪀அரைத்துக் கொள்ள.:*
தேங்காய் துருவல் - கால் கப்,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சி - சிறிய துண்டு.
*🪀தாளிக்க.:*
கடுகு - ஒரு டீஸ்பூன்,
சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
எண்ணெய் - சிறிதளவு
No comments:
Post a Comment