சமையல் அறை
******************
மத்யமாரில் fb அருணா ரகுராமன்
எனக்குத்தான் இப்போது வீடே இல்லையே என் சமையலறையை மறந்து விடலாம்
இப்போது மேலே போட்டிருப்பது குஜராத்தில் சமையல்அறை
ஏறத்தாழ எல்லார் வீட்டிலும் இப்படித்தான் இருக்கும்.
பெண்ணுக்கு கல்யாணம் செய்து தரும்போது இது போல சாமான்கள் வைக்க இவ்வளவு டப்பாக்கள் வாங்கித்தரணும் என கணக்கு உண்டு
குஜராத்திகள் நம்மைபோல மாதக்கணக்குக்கு சாமான் வாங்க மாட்டார்கள்
வருடத்துக்கு வாங்குவது அவர்கள் வழக்கம்
பிப்ரவரியில் அரிசியும் மார்ச்சில் கோதுமையும் அறுவடையாகி வந்து விடும்
வருடத்திற்கு தேவையானவற்றை மொத்தமாக வாங்கி புடைத்து சுத்தம் செய்து சாப்பாட்டு விளக்கெண்ணை( துவில்) என சொல்வார்கள்
அதை கை பொறுக்கும் பதத்தில் சுடவைத்து போட்டு பிசிறி பெரிய பெரிய அலுமனிய டின்களில் அடைத்து வைப்பார்கள்
வீட்டிலேயே ghar Ganti என மாவு அரைக்கும் மிஷிகன் இருக்கும் அதில் இரண்டு நாளைக்கு ஒருதரம் மாவு அரைத்து fresh ஆக சப்பாத்தி செய்வார்கள்
குஜராத்தி பெண்கள் கடும் உழைப்பாளிகள்
நமது அம்மி போலவே அவர்களிடமும் கல் உண்டு சட்னி இவை அரைக்க
மத்தியானம் தூங்காமல்கடலைமாவு கொண்டு மிக்சர் சேவ் காடியா மமரா என்ஏதாவது திண்டி செய்தவண்ணம் இருப்பார்கள்
வீட்டில் இருக்கும் செம்பு வெங்கல பாத்திரங்கள் பளபளக்க மேய்த்து அலங்காரமாக அடக்கி வைத்து பெருமை பட்டுக்கொள்வார்கள்
இவ்வளவு செய்தும் வருடாந்திர சாமான்கள் சேர்த்து வைத்தும் அவங்க சமையலறை சமையல் செய்த சுவடு தெரியாதவாறு துடைத்து துடைத்து வைச்சுப்பாங்க
சாப்பிடுவதற்கு அரை மணிக்கு முன்னில் ஆரம்பித்து அரக்கபரக்க சமைத்து மடமடவென காற்றுபோல சப்பாத்தி இட்டு பரிமாறு நறுவிசாக கச்சிதமாக வேலையை முடிப்பார்கள்
நாம் மணையில் அமர்ந்து எதிரே இலை விரித்து சாப்பிடுவோம் எனில்
அவங்க தரையில் அமர்ந்து எதிரே சிறிய சதுர stool ல் தட்டு வைத்து சாப்பிடுவார்கள் சாப்பாட்டுக்கு மரியாதை தரவேண்டுமாம்
கருப்பு ஆடை அணிந்து கண்ணனின் சந்ததியராகத் தங்களைச் சொல்லிக் கொள்ளும் ரபாரி பெண்கள் மங்கு மங்கு என வேலை பண்ணுவாங்க வசவசனு பிள்ளைகள் இருக்கும்
ஆனால் அவங்க வயிறும் இடுப்பும் துடுப்பு போடும் எப்படி அவங்களுடைய கடினமான உழைப்புதான் காரணம்
No comments:
Post a Comment