Monday, August 15, 2022

பச்சை காய்கறி குழிப்பணியாரம்

 பச்சை காய்கறி குழிப்பணியாரம் 

🍱 *தேவையான பொருட்கள்:* 

 *அரைக்க :* 

பச்சை பயறு-1/2 கோப்பை
பச்சை மிளகாய்-3
கொத்தமல்லி இலை -1 பிடி
சீரகம்-1/2 தேக்கரண்டி
பூண்டு-4, அல்லது இஞ்சி விருப்பத்திற்கு ஏற்ப
உப்பு சுவைக்கு
காய்கறி – காளான் குடைமிளகாய்,வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

செய்முறை:

பச்சை பயிரை இரவுமுழுவதும் ஊறவைத்து (8-10 மணி நேரம்)

மேலே கூறியுள்ள ‘அரைக்க’ பொருட்களோடு சேர்த்து நல்ல விழுதாக அரைத்தெடுத்துக்கொள்ளவும்.

மேற்கூறியுள்ள பொடியாக அறிந்த காய்கறிகளை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும் தேங்காய் துண்டுகளும் இதில் சிறிதளவு(1tsp) சேர்க்கலாம் குழந்தைகள் விரும்பி உட்கொள்வர்.

குழிப்பானியார கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் காய் கலந்த மாவை ஊற்றி இருபுறமும் இளம் தீயில் நிதானமாக வேகவைத்து எடுக்கவும்.

இதனுடன் மிளகாய் சட்னி சுவை சேர்க்கும். புதியன படைப்போம் ஆரோக்கியமான வாழ்வமைப்போம்.

குறிப்பு :

1. தீயின் வேகம் அதிகமாயிருந்தால் வெளியில் கருகியும் உள்ளே வேகமலும் இருக்கும் பொறுமையாக வேக வைக்கவும்.

2. காய் கறிகளை கலந்தோ, அல்லது இடையில் தூவி மேலே சிறிது மாவு ஊற்றியும் செய்யலாம்.


No comments:

Post a Comment