Monday, August 15, 2022

நெய்க்கதலி பழம்

 ஆதிகேசவப் பெருமாளுக்கு மிகவும் விருப்பமான நெய்க்கதலி பழம்*

நெய்க்கதலிப் வாழை கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாகப்பயிரிடப்படுகிறது. தோற்றத்தில் ரசகதலிப்பழம் போலிருந்தாலும் காய்கள் பழுக்கும்போது தோல் இளம் பச்சை நிறமாகும். நன்கு பழுத்து தோலில் லேசாக பிரவுன் நிற புள்ளிகள் விழுந்தபிறகு பழத்தை சாப்பிட ருசி அதிகரிக்கும்.இந்த பழத்தின் விசேஷம் என்னன்னா பழம் சாப்பிடும்போது லேசாக வாசனை நாசியில் அலைபாயும். அத்துடன் மருத்துவ குணம் நிறைந்ததும் என்கிறார்கள்.

வீட்டில் வைத்திருந்தாலும் நன்கு பழுக்கத் துவங்கும் போது அறையில் வாசனை மூக்கைத்துளைக்கும்.

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாளுக்குப் பிடித்த பழமும் நெய்க்கதலிப்பழம்தான். திருவட்டாறு ஆறு அருகே நெய்க்கதலி வாழைகள்் பயிரிட்டு பெருமாளுக்கு வாழைப்பழம் படைப்பதற்காக் கதலிவனம் என்ற தோட்டம் திருவிதாங்கூர் மன்னராட்சி காலத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. இப்போதும் கதலி வனம் இருக்கிறது. ஆனால் அங்கே நெய்க்கதலி வாழைகள் பயிரிடப்படவில்லை.

41 நாள் காலையில் ஆதிகேசவப் பெருமாளை வணங்கி 41.ம் நாள் பெருமாளுக்கு கதலிப்பழம், தேன், நெய் ஆகியவற்றை சமர்பித்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. கதலிப்பழம், தேன், நெய் கலந்து நிவேத்யம் செய்தபின்னர் பக்தர்களுக்கு சாப்பிடக் கிடைக்கும். இந்த கலவை தித்திப்பாக இருக்கும்.

கதலிப்பழ புராணம் போதும் என நினைக்கிறேன்..

குமரி மாவட்டத்துக்கு வந்தா கதலிப்பழம் வாங்கிச்சாப்பிட மறக்காதீங்க..

சராசரியாக கிலோ 40 -50 ரூபாய் விலையில் கிடைக்கும் நெய்க்கதலிப்பழம் இப்போது ரூ.70 விலையில் கிடைக்கிறது..

No comments:

Post a Comment