Tuesday, August 16, 2022

கசகசா

 கசகசாவை பயன்படுத்துவதால் என்ன நன்மைகள் தெரியுமா...?*_

கசகசா விதைகளில் இருக்கும் பொட்டாசியம் சிறுநீரக கற்களை குணப்படுத்தக்கூடியது.

வயிற்று போக்கு ஏற்படும் நேரத்தில் சிறிதளவு கசகசாவை வாயிலிட்டு மென்று சிறிதளவு நீர் குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.

கசகசாவில் அதிக அளவு காப்பர் மற்றும் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களை பலப்படுத்தும். மூளைக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், இரும்பு, காப்பர் போன்ற சத்துக்கள் கசகசாவில் உள்ளன.

இது நரம்பு செல்களை தூண்டி, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

கசகசா, முந்திரி பருப்பு, பாதம் பருப்பு இவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து உண்டுவர உடல் வலிமை பெறும்.

கசகசா உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கும். மேலும் இதில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரங்களில் கசகசாவை பாலில் அரைத்து உண்டால் தூக்கம் நன்றாக வரும்.

கசகசா விதைகளை கொண்டு தேநீர் தயாரித்து இரவில் தூங்குவதற்கு முன்பு குடித்து வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

🌷🌷

No comments:

Post a Comment