*1947 ஆகஸ்ட் 15*
நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. ஏன் இந்தத் தேதி என்பதற்குப் பின் சுவாரஸ்யமான பின்னணி உள்ளது.
இந்திய சுதந்திர போராட்டம் 1940க்கு பின் தீவிரமானது. இதே நேரத்தில் இரண்டாம் உலகப்போரும் ஏற்பட்டது. போரின் காரணமாக ஆங்கிலேய அரசின் கஜானா வெகுவாக கரைந்திருந்தது. சொந்த நாட்டையே(இங்கிலாந்து) நிர்வகிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 1945 பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்ததது. இதற்கு முக்கிய காரணம், தனது தேர்தல் வாக்குறுதியில் இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இத்தகைய காரணங்களால் 1948 ஜூன் மாதத்துக்குள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவெடுத்தது.
இந்நிலையில் 1947 பிப்., 10ல் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் பொறுப்பேற்றார். உடனடியாக இவர் நேரு, ஜின்னா உள்ளிட்ட தலைவர்களிடம் தொடர் பேச்சுகள் நடத்தினார். இது சுமூகமாக முடியவில்லை. காரணம், ஜின்னா தனிநாடு கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார். நாட்டில் மக்களிடையே பதட்டமான சூழல் உருவானது. இதை மவுண்ட்பேட்டன் எதிர்பார்க்கவில்லை. இதனால் முன்னதாகவே சுதந்திரம் வழங்க வேண்டிய கட்டாயத்தை அவருக்கு ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 1947 ஜூன் 3ல் நடந்த கூட்டத்தில் முன்கூட்டியே சுதந்திரம் மற்றும் நாட்டைப் பிரிப்பது பற்றி முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக இது 'ஜூன் 3 மவுண்ட்பேட்டன் திட்டம்' என அழைக்கப்பட்டது. ஆகஸ்ட் 15: மவுண்ட் பேட்டனுக்கு, ஆகஸ்ட் 15 தனிப்பட்ட முறையில் விருப்பமான தேதி. ஏனெனில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1945 ஆக.,15ல் தான் ஜப்பானிய வீரர்கள், இவரிடம் (அப்போது ஆங்கிலேயர்களின் கிழக்கு ஆசிய கமாண்டராக இருந்தார்) சரணடைந்தனர். இதனால் இந்த தேதியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க விரும்பினார்.
நள்ளிரவு:
இந்தியாவுக்கு ஆக., 15ல் சுதந்திரம் என அறிவிக்கப்பட்டவுடன் ஜோதிடர்கள் அன்றைய நாள் சரியில்லை, இரண்டு நாட்கள் கழித்து கொடுக்கலாம் என இந்திய தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆக., 15 என்பதில் மவுண்ட் பேட்டன் உறுதியாக இருந்தார். இந்த சூழ்நிலையில் தான் ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு 12 மணி என்பது புதிய நாள். இந்தியர்களுக்கு அதிகாலை 5 மணி தான் புதிய நாள். இதனால் ஆகஸ்ட் 15 நள்ளிரவே இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.
1947ல் சுதந்திரம் பெற்றவுடன் 14 பேர் கொண்ட முதல் அமைச்சரவை பதவியேற்றது. நேரு பிரதமராகவும், வல்லபாய் படேல் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து ராஜேந்திர பிரசாத் (உணவு, விவசாயம்), மவுலானா அபுல் கலாம் ஆசாத் (கல்வி), ஜான் மாதாய் (ரயில்வே), சர்தார் பால்தேவ் சிங் (பாதுகாப்பு), ஜெகஜீவன் ராம் (தொழிலாளர் நலன்), சி.எச்.பாபா (வணிகம்), ரபி அகமது கித்வாய் (தொலைத்தொடர்பு), ராஜ்குமாரி அமித் கவுர் (சுகாதாரம்), அம்பேத்கர் (சட்டம்), சண்முகம் ஷெட்டி (நிதி), ஷியம்பிரகாஷ் முகர்ஜி (தொழில்துறை), காட்கில் (எரிசக்தி, சுரங்கம்) ஆகியோர் பதவியேற்றனர்.
இந்தியா சுதந்திரம் பெற்ற 1947, ஆக.15ல் நாட்டுக்கான தேசிய கீதம் இல்லை. 1911ல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட 'ஜன கண மன' பாடல் 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
* இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி கோல் கட்டாவில் இருந்தார்.மத மோதல்களை எதிர்த்துஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.
* சுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸ் இயக்கத்தையே கலைக்க நினைத்தார் காந்திஜி. சுதந்திரம் பெற்று தந்ததை சொல்லிக்காட்டி மக்களிடம் அதிகாரம் செலுத்துவர் என அவர் நினைத்தார்.
* கதர் துணியில் மட்டுமே தேசியக்கொடி தயாரிக்கப்பட வேண்டும். மற்ற வகை துணிகளில் கொடியை தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றம்.
* அரபிந்தோ கோஸ், நெப்போலியன் போனபார்ட், ஆகியோர் ஆகஸ்ட் 15ல் பிறந்தவர்கள்.
* மகாதேவ் தேசாய், அமர்சிங் சவுத்ரி, ஆகியோர் ஆகஸ்ட் 15ல் இறந்தவர்கள்.
1:1947ல்இந்தியாவின் ஒரு ரூபாய்அமெரிக்காவின்ஒருடாலருக்கு சமமாக இருந்தது.
3:இந்தியா சுதந்திர தினம் கொண்டாடும் ஆகஸ்ட் 15 அன்று தென்கொரியா, பஹ்ரைன், காங்கோ ஆகிய மூன்று நாடுகள் சுதந்திர தினத்தைகொண்டாடுகின்றன.
1100:இந்தியாவில்சுதந்திரத்தின் போது 1,100 மொழிகள்வழக்கத்தில் இருந்தன. தற்போது 880 மொழிகள் மட்டுமே உள்ளன.
17:இந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். அதிகமுறை கொடியேற்றியவர் என்ற பெருமையை நேரு பெறுகிறார்.
88.62:இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.88.62 பைசா.
562:இந்தியா சுதந்திரம் பெற்ற போது 562 சுதேச சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்த சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று பெயர் பெற்றார்.
2:மவுண்ட்பேட்டன் டில்லி(இந்தியா) மற்றும் கராச்சி(பாகிஸ்தான்) ஆகிய இரண்டு இடங்களிலும் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றார்.
நாட்டு மக்களிடை.ேய இந்த ஒற்றை வார்த்தை, தேசிய உணர்வைதட்டி எழுப்பியது.அது தான் 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கம். சுதந்திர போராட்டத்தின் போது இந்த வார்த்தையை உச்சரிக்கும் போது, மக்களின் சுதந்திர தாகம் அதிகரித்தது. தற்போதும் இன்றைய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்த வார்த்தை அதே உத்வேகத்தை அளிக்கிறது. இதனை முதன் முதலில் இந்த தேசத்துக்கு உரக்க கூறியவர் நேதாஜி என அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ். இவர் 1941ம் ஆண்டு நவ., 2ம் தேதி ஜெர்மனியில் 'சுதந்திர இந்தியா மையம்' என்ற அமைப்பை தொடங்கினார். அதன் துவக்க விழாவில் தான் நேதாஜி, தேசிய உணர்வை தட்டி எழுப்பும் 'ஜெய்ஹிந்த்' (வெல்க இந்தியா) என்ற கோஷத்தை முழங்கினார். அப்போது முதல் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களிடமும் இது வாழ்த்தாக ஒலித்தது. நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்ற நேரு, முதல் சுதந்திர உரையை 'ஜெய்ஹிந்த்' என்று கரம் உயர்த்தி கூறி முடித்தார். நேதாஜியும், நேருவும் இருவேறு நிலைகளில் நின்று போராடியவர்கள். ஆனால், இருவரது நோக்கமும் (நாடு விடுதலை) ஒன்று தான். 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கம் நேதாஜியால் உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் நேரு அதனை ஆர்வமுடன் அரங்கேற்றினார்.
சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடம் கருத்துக்களை கொண்டு செல்ல எவ்வித தொலைத்தொடர்பு வசதிகளும் கிடையாது. அப்படியே இருந்தாலும் அது ஆங்கிலேய
அரசுக்கு சாதகமான செய்திகளைத் தான் வெளியிட வேண்டும். ஆதரவாக கருத்துகளை வெளியிட்டால் ஆங்கிலேயர் அதனை அழித்து விடுவார்கள். அந்தளவுக்கு ஆங்கிலேயர்களின் ஒடுக்குமுறை இருந்தது. இந்நிலையில் இரண்டாம் உலகப்போர் (1941) நடந்து கொண்டிருந்த நேரத்தில் நேதாஜி, ஜெர்மனியில் இருந்து கொண்டே, மக்கள் மனதில் சுதந்திர உணர்வை தட்டி எழுப்புவதற்காக வானொலி நிலையத்தை தொடங்கினார். 'ஆசாத் ஹிந்த் வானொலி' 'ஆசாத் முஸ்லிம் வானொலி', 'தேசிய காங்கிரஸ் வானொலி' என்ற மூன்று வானொலி நிலையங்களை தொடங்கினார். முதல் இரண்டும் இந்தியில் செய்தி களையும், அவரது பேச்சுகளையும் ஒலிபரப்பியது. இவை இந்திய மக்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.மூன்றாவது வானொலி ஆங்கிலத்தில் ஒலிபரப்பியது.இது வெளிநாட்டிலிருந்த புரட்சி இயக்கத்தினருக்கு, குறிப்பாக ஜப்பானில் தங்கி விடுதலை இயக்கத்தை நடத்தி வந்த ராஷ்பிகாரி போசுக்கு பெரிதும் பயன்பட்டது. பின் ஜெர்மனியை விட்டு நேதாஜி புறப்பட்ட பின், சிங்கப்பூர் மற்றும் பர்மாவிலும் இந்த வானொலி செயல்பட்டது.
No comments:
Post a Comment