Monday, August 1, 2022

ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில்.

 கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே...!

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில்.

இக்கோவிலில் மண்டகப்படி நாள்களில் தினமும் இரவில் அம்பாள் திருவீதி உலாவின்போது ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்  அம்பாள் முன்பாக வரிசையாக இருபுறமும் நின்று தீப்பந்தம் பிடிப்பார்கள். இந்த தீப்பந்தம் பிடிக்கும் வேண்டுதல் மூலம் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் ஆகின்றது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்நலம் சீராகிறது, தீப்பந்த ஒளியில் பக்தர்கள் வாழ்வில் ஒளி பிறக்கிறது என்று ஐதீகமாக கடை பிடிக்கப்பட்டு பொதுக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.   

இங்கு பக்தர்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு செய்கின்றனர்.  உலகத்தில் இது போன்ற வேண்டுதல் தீவெட்டி பிடித்தல் வழிபாடு எங்குமே கிடையாது. இது இக்கோயிலின் சிறப்பாகும்.

இங்குள்ள நெல்லிமரத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க தொட்டில் கட்டியும் திருமணம் நடைபெற மஞ்சள் கயிறு கட்டியும் சுகப்பிரசவம் நிகழ தொட்டிலும், வளையலும் கட்டி பிரார்த்தனை செய்கின்றனர்.

கொன்னையூர்..

பொன்னமரவாதி வட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம்.

No comments:

Post a Comment