Tuesday, April 12, 2022

கந்தனின் வேல் வழிபாடு

 பெரிய கஷ்டங்களும்... படிப்படியாக குறைய... வேல் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்...!!

சரவணபவ என்பதன் பொருளும்... வேலின் சிறப்பும்...!!

முருகனை வணங்கும் அனைவரும் ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை கூறுவது சிறப்பு மிக்க ஒன்று.

'சரவணம்" என்றால் தர்ப்பை என்று பொருள். 'பவ" என்றால் தோன்றுதல் என்று பொருள். தர்ப்பைக் காட்டில் இருந்து முருகன் தோன்றியதாலேயே 'சரவணபவ" என பெயர் வந்தது.

சிவனின் நெற்றிப் பொறியிலிருந்து தோன்றிய ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தன. குழந்தைகளின் தாயான பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது ஆறு முகத்தோடும், பனிரெண்டு கைகளோடும் நம் தமிழ் கடவுளான முருகன் தோன்றினார்.

தீய சக்திகளிடம் இருந்து நம்மை காக்க வேலாயுதத்தை கையில் வைத்துக்கொண்டு நிற்பவர் முருகப்பெருமான். அந்த வேலினை எப்படி வழிபடலாம்? என்று பார்க்கலாம் வாங்க.

கந்தனின் வேல் வழிபாடு :

கலப்படம் இல்லாத சுத்தமான மஞ்சள் பொடியைப் எடுத்து, அதில் பன்னீர் ஊற்றி நன்றாக கலக்கவும்.

கலக்கிய மஞ்சளை கொண்டு பூஜையறை சுவற்றில் வேல் வடிவத்தை வரைந்து கொள்ள வேண்டும்.


வீட்டு சுவற்றில் வேல் வரைய முடியாத சூழ்நிலை இருந்தால், ஒரு வெள்ளைக் காகிதத்தில் நான்கு முனையிலும் மஞ்சள் தடவி விட்டு நடுவே மஞ்சளால் வேல் வரைந்து சுவற்றில் ஒட்டி வைத்தும் வழிபாடு செய்யலாம்.

வேலினை வரையும் பொழுது 'ஓம் முருகா" என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே வரைய வேண்டும்.

வேலுக்கு நடுவில் விபூதியில் பட்டை இட்டு, நடுவே குங்குமம் வைக்க வேண்டும்.

இப்போது வீட்டில் சக்தி வாய்ந்த வேல் வந்துவிட்டது. மஞ்சளினால் வரைந்த வேலினை, வேலனாக பாவித்து தினம்தோறும் வேல் வழிபாடு செய்து வர வேண்டும்.


வழிபடும் முறை :

காலையில் எழுந்து குளித்துவிட்டு முருகப்பெருமானை மனதார நினைத்து வேலுக்கு முன்பாக ஒரு மண் அகல் விளக்கேற்றி வைத்துவிட்டு, பூஜையறையில் அமர வேண்டும்.

உதிரிப் பூக்களை கொண்டு 'ஓம் முருகா" என்றோ அல்லது உங்களுக்கு தெரிந்த முருகனின் எளிமையான மந்திரத்தை உச்சரித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

துன்பங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் சரி அந்த கஷ்டத்தை படிப்படியாக குறைக்கக்கூடிய சக்தி இந்த வேல் வழிபாட்டிற்கு உண்டு.

மஞ்சளில் வரைந்த வேல் நிறம் கொஞ்சம் மாறும்போது ஈரத்துணியில் பழைய வேலை துடைத்து எடுத்துவிட்டு மீண்டும் புதிய வேல் வரைந்து கொள்ளலாம்.

பேப்பரில் வேல் வரைந்து வைத்திருந்தால், பழைய பேப்பரை நீக்கிவிட்டு, புதிய பேப்பரில் மீண்டும் வேல் வரைந்து மாற்றி கொள்ளலாம்.

உலகத்தை காக்கும் ஆயுதமான வேல் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் அந்த வீட்டிற்கு இறை சக்தி நிறைந்த பாதுகாப்பு இருக்கும்.

ஓம் சரவணபவ : 🙏🙏



No comments:

Post a Comment