சென்னை வேளச்சேரி தாம்பரம் வழித்தடத்தில் சேலையூரில் அமைந்துள்ளது அருள்மிகு அபிராமி அம்மன் உடனுறை அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் இத்திருத்தலத்தில் அற்புதமான அழகுடன் அபிராமி அம்மன் காட்சியளிக்கிறாள். அபயம், வரம், ஹஸ்தம், பாசாங்குசத்துடன் காணப்படும் சுமார் மூன்றடி விக்ரகம் நிற்கும் திருக்கோலம். உயர்ந்த பட்டாடை விசிறி மடிப்புகளுடன். காதுகளில் வெள்ளியாலான தாடாங்கம். கழுத்தில் நீண்ட கல்மாலை. திருக்கழுத்தில் திருத்தாலி. திருநெற்றியில் வெள்ளியால் ஆன விபூதியின் நடுவில் காணப்படும் சந்தனம், குங்குமம் என அலங்காரத் தோற்றத்தில் அருள்பாலிக்கிறாள் அம்மன்.
மேலும் இத்திருக்கோயிலில் ஆனந்த விநாயகருக்கு என்று தனி சன்னிதி உள்ளது. மேலும் அருகே வள்ளி, தெய்வானை முருகனுக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. நவக்கிரக சன்னிதியும் அமைந்துள்ளது.மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று, பதினெட்டு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு, பூஜை செய்யப்பட்டு எல்லா நதி தேவதைகளுக்கும் அந்தந்த நதியில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரில் அர்ச்சனை செய்யப்படுகிறது
அந்த நாளில் மட்டும் பக்தர்கள் ஒவ்வொரு நதி தேவதை, தன் கையில் வைத்திருக்கும் கலசத்தின் வழியாக வரும் நீரில் ஸ்நானம் செய்து, இறுதியாக திருக்குளத்தில் நீராடலாம். எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். கும்பகோணம் மகா மகத்தை நினைவுப்படுத்தும் புண்ணிய நீராடல் விழா. அத்தகைய சிறப்புப்பெற்ற இத்திருக்கோயில் தினசரி காலை 6.30 முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும் இத்திருக்கோயிலுள்ள அபிராமி அன்னையை வேண்டினால் அல்லல் நீங்கி பிரார்த்தனை செய்த காரியங்கள் யாவும் நடக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
-------------------------------------------------------------------------------------------------------------
தேன் போல் இனிக்கும் அதிசய வேப்பமரம் உள்ள சீதளா தேவி கோயில்.!
திருவாரூரில் உள்ள சக்திபுரம் எனும் ஊரில் சீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது . சீதளம் என்றால் குளிர்ச்சி என்று அர்த்தம் இங்கு வழிபடும் மக்களின் உடல் மற்றும் மன உஷ்ணத்தை போக்கும் தாய் ஆதலால் இவளுக்கு இந்த பெயர் அமைந்திருக்கிறது . வெப்பத்தை தணிக்கும் இந்த அம்மனுக்கு ஆதிபராசக்தி கமலாம்பாள் என்ற வேறு பெயர்களும் உண்டு .
இந்த கோயிலில் எந்த அம்மன் கோயிலிலும் கேள்விபடாத அதிசயம் நடக்கிறது . இந்த கோயில் வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த வேப்பமரத்தின் இலை இனிக்கிறது . இனிப்பு என்றால் ஏதோ சாதாரணமான இனிப்பு அல்ல தேன் போன்று இந்த இலை சாறு இனிப்பது அதிசயத்திலும் அதிசயமாக உள்ளது. பல விதமான ஆராய்ச்சி களுக்கு உட்படுத்தி பார்த்த பிறகும் இதன் காரணம் புரியவில்லை மேலும் இந்த இலையை கோயில் வளாகத்திற்கு வெளியே எடுத்து வந்து சாப்பிட்டால் கசக்கிறது . அம்பாளின் அருளாகவே இதை பக்தர்கள் கருதுகிறார்கள்.
இந்த கோயிலே பிரம்மாண்டமாக பரந்து விரிந்துள்ள அந்த வேப்ப மரத்தின் கீழ் தான் அமைந்துள்ளது . கோவிலின் முன்பு நாகலிங்க மரமும் அதன் கீழ் விநாயகரும் உள்ளார் இவருக்கு நாகலிங்க விநாயகர் என்றே பெயர் . அனுமனுக்கு தனி சந்நிதி உண்டு . இங்கு தாயார் இரு உருவங்களாக முன்புறம் சீதளா தேவியாகவும் அவள் பின்புறம் பெரிய மகமாயி அம்மனாகவும் காட்சி அளிக்கிறார் . இங்கு நவராத்திரி நெய் குள விழா மிகவும் பிரசித்தம் . நவராத்திரி அன்று மண்டபத்தின் நடுவில் 7 ற்கு 3 என்கிற அளவில் சதுர பாத்திரம் வைத்து அதில் சர்கரை பொங்கல் நிரப்பி நடுவில் குளம் போல் நெய் வார்த்து வழிபடுவார்கள் . இதில் அம்மன் முகம் தெரிவதாக பக்தர்கள் சொல்கிறார்கள் . இதுவே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் படுகிறது . இந்த தாயாரை வழிபட நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒரு ருபாய் நாணயத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து அதை அர்சகரிடம் கொடுத்தால் அவர் அதை அம்மன் பாதத்தில் வைத்து விடுவார் . விரைவிலேயே வேண்டியது நிறைவேறுகிறது . அப்படி நிறைவேறிய பிறகு அந்த காசை உண்டியலில் போட்டு விடுகிறர்கள் . சித்திரை முதல் பங்குனி வரை இங்கு விஷேச நாட்கள் . இந்த கோயில் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை திறந்திருக்கும் .
No comments:
Post a Comment