Sunday, August 2, 2020

நாச்சியார் திருக்கோயில்

கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே...!

இன்று கருட பஞ்சமி :

நாச்சியார் திருக்கோயில்.

கருட பஞ்சமி நாளான இன்று கருட பட்சிகள் மோட்ஷம் பெற்ற ஸ்தலமான நாச்சியார் கோவில் கல் கருடன் ஆலயத்தை தரிசனம் செய்யலாம்.

அருள்மிகு ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ  ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில்

இங்கு ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும் வஞ்சுளவல்லி நாச்சியாருக்கும் கருடன் திருக்கல்யாணம் செய்து வைத்தார் என்பது தல வரலாறு.

இங்கு கருடாழ்வாருக்கு தனியாக சன்னதிதானம் அமைந்துள்ளது.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.

இங்கு பெருமாள் சன்னதி அருகில் குடிகொண்டுள்ள கல் கருடன் தான் இந்த கோயிலின் மூலவர், உற்சவர் மற்றும் வாகனம் ஆகிய மூன்றுமாக இருப்பவர்.

எந்த கோவிலிலும் மூலவரே உற்சவ மூர்த்தியாக செல்வதில்லை. ஆனால் இங்கே மூலவராக உள்ள கல்கருடன் சிலையே உற்சவராக எடுத்துச் செல்லப்படுகிறார்.

திருநறையூர்

கும்பகோணம்

தஞ்சை மாவட்டம்.

No comments:

Post a Comment