ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏
🌺அத்தலத்தில் பிரசாதமாக வழங்கப்படும் முஸ்தாபி சூரணம் எனப்படும் கோரைக்கிழங்கு, சர்க்கரை, ஏலக்காய் மற்றும் பல மூலிகைகளால் தயாரிக்கப் படும் பிரசாதம் நோய்களை நீக்கவல்லது.
🌺பூவராஹ சுவாமி முதன்மையான விக்ரகமாக நின்ற கோலத்தில் காட்சியளிக் கிறார். தன் இடுப்பில் இருக்கும் சங்கு மற்றும் சக்கரத்தை தன் இரு கைகளால் மறைத்த வண்ணம், திருமேனி மேற்கு திசையை நோக்கியும், முகம் தெற்கு திசையை நோக்கியும், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
🌺இத்தல வராஹர் இரு கைகளையும் இடுப்பில் வைத்து அழகிய வடிவில் அருட்காட்சி யளிக்கிறார். இங்கு யக்ஞ வராஹர் உற்சவ மூர்த்தியாகவும், தாயார் அம்புஜவல்லியாகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
🌺இத்தல தாயாரின் தோழிகளாக சப்த கன்னியர்கள் இத்தலத்தில் அருள்கின்றனர். பூவராக சுவாமி திருக்கோயிலின் முகப்பானது கம்பீரமான எழில்மிகு ராஜகோபுரத்தின் அமைப்பைக் கொண்டது.
🌺திருமண வரம் வேண்டி கன்னியரும், காளையரும் இவ்வராஹப் பெருமாள் ஆலயத்தை மலர் மாலையோடு வலம் வந்தால் அவர்களுக்கு மிக விரைவில் திருமணம் நிச்சயமாகிறது.
🙏🌹🌺 **Jai Sri Mushnam Varaaga Perumalki Jai* 🌹🌺🙏🏼
ஓம் நமோ நாராயணாயா 🙏
No comments:
Post a Comment