ஜகந்நாதர் ரத யாத்திரை ஏன்?
நம்மில் அநேகர் 'ஏதோ வருடாவருடம் எல்லா கோவில்களை போலவும் நடக்கும் ரத யாத்திரை' என்றளவிலேயே ஜகந்நாதர் ரத யாத்திரை பற்றி அறிவோம். நாளை நடக்கவுள்ள பூரி ஜகந்நாதர் ரத யாத்திரைக்கான உண்மை காரணத்தை காண்போமா? (From the talks of 'Jagadhananda jps' Swamin of ISKCON)
ஜகந்நாதர் விக்கிரஹ வடிவில் தோன்றியது 'குண்டீச்சா மந்திர்' என்னும் ஆலயத்திலேயே! இது ஜகந்நாதர் கோவிலிலிருந்து சுமார் 2 மைல் தொலைவில் உள்ளது. இங்கேதான் indradyumna மஹாராஜா நரசிம்மரை நோக்கி யாகம் செய்யவும், ஜகந்நாதர் விக்கிரஹ வடிவில் தோன்றினார். ஆகவே, கிருஷ்ணனாக நினைக்கப்படும் ஜகந்நாதர் தோன்றிய ஆயர்பாடி ஆக இந்த குண்டீச்சா மந்திர் நினைக்கப்படுகிறது!
இந்த குண்டீச்சா மந்திர் -ன் திருநாமம் 'சுந்தராசலம்' ஆகும். ஜெகந்நாதரின் திருக்கோவில் பெயர் நீலாச்சலம் ஆகும். ஜெகந்நாதரை எல்லோரும் வணங்கும் திருக்கோவில் (நீலாச்சலம்) கிருஷ்ணன் குடிபெயர்ந்த துவாரகை ஆக நினைக்கப்படுகிறது. ஆகவே, பிரதி வருடம், புது ரத்தத்தில் கிருஷ்ணன் துவாரகையிலிருந்து பிருந்தாவனம் வருவதை வரவேற்கும் வண்ணமாக இந்த ஜகந்நாதர் ரத யாத்திரை ஜகந்நாதர் நீலாச்சலத்திலிருந்து சுந்தராசலம் (குண்டீச்சா மந்திர்) செல்வதை குறிக்கிறது!
ஜெய் ஜெகன்னாத்!
No comments:
Post a Comment