Sunday, July 24, 2022

நாண்மதியப்பெருமாள் கோயில்

 ஸ்ரீ  தலைச்சங்காடு 

    ஸ்ரீ  தலச்சங்க  நாச்சியார்  ஸமேத  ஸ்ரீ  நாண்மதியப்பெருமாள் கோயில்

திருமங்கையாழ்வார்___ 

கண் ஆர் கண்ணபுரம் ....

தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்க மேல்திசையுள்

விண்ணோர் நான் மதியை
விரிகின்ற வெம் சுடரை
கண் ஆரக் கண்டு கொண்டு கழிக்கின்றது
இங்கு என்று கொலோ

_____ கண்நிறைந்த திருக்கண்ணபுரம் , திருக்கடிகை மனம் மிகுந்து குளிர்ந்த தாமரைகள் சூழும் தலைச்  சங்காட்டில்  மேற்குத் திசையில் வாணவர்களுக்கு முழுமதியாய் உதிக்கின்ற செங்கதிராய்   இருக்கும் எம்பெருமானை  இவ்விடத்திலேயே கண்கள் குளிர கண்டு கொண்டே   இருப்பேனோ !.

    தலைச்சங்காடு 

அல்லது திருதலைச்சங்க நாண்மதியம் எனப்படும் இத்திருத்தலம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மி. தூரத்தில் உள்ளது.

       இங்கு பெருமான் நாண்மதியப் பெருமாள் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.இத்திருத்தலம்  ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 திருக்கோயில்களில் ஒன்று.

      தலைச்சங்க நாண்மதியத்துள்ளான் , தலைச்சங்க பெருமாள் , நாண்மதியப்பெருமாள் , வெண்சுடர்ப் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகம். தாயார் தலைச்சங்க நாச்சியார் (சவுந்தர நாயகி) ஆவார்.

தீர்த்தம் 

சங்கு தீர்த்தம்

     (கோயிலுக்கு எதிரில் உள்ளது) .

ஸ்தல மரம்

புரசு

விமானம்

சந்திர விமானம்.

      பழந்தமிழர்கள் இயற்கைத் தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும் அதனை சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்திருக்கின்றனர் .

     எனவே தலைச்சங்காடு தலை+சங்கு+ காடு என பிரித்து பார்த்தால் பொருள் விளங்கும்.

      சங்கு பூக்கள் தோட்டங்களில் மிகுதியாகப் பயிரிட்டு இவ்வூர்க் கோயில்களுக்கும், இதனைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. இந்தப் பூந்தோட்டங்களை ஒட்டியே தலைச்சங்காடு என்ற பெயர் பெற்றது  இந்த   ஸ்தலம்.

      சந்திரன் சாப விமோசனம் பெற்ற ஸ்தலம்.

     இத்தலத்தில் எம்பெருமான் அழகிய சங்கை ஏந்தியபடியால் திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை தலைச்சங்க நாண்மதியம் என பாடினார் .

      40 ஆண்டுகாலம் வழிபாடின்றி இருந்த இத்திருத்தலத்தை வடுக நம்பி சீரமைக்க முயன்று, அவருக்குப் பின்னர் அவரது சீடர் சுந்தர ராமானுஜ தாசர் திருப்பணி     செய்த  திருக் கோயில்.

       இத்தலத்து பகவானை வழிபட்டால்  அவர் காண்போரை ஈர்க்கும் பொலிவும், மதிப்பும்  அளிப்பார்   என்பது  இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

       ஒம்  நமோ  பகவதே  ஸ்ரீ  வாசுதேவாய  நம  :

No comments:

Post a Comment