எச்சில் இலை( சிறுகதை)
ஓட்டல் உள்ள சர்வருக்கும் ஒருத்தருக்கும் வாக்குவாதம் நடந்துக்கிட்டு இருந்துச்சு, சர்வர் சொல்லிட்டு இருந்தாரு இங்க சாப்பிட்ட வங்கதான் எச்சில் எலைய எடுக்கனும் அதுதான் இங்க நடமொற ந்னு , ஆனா சாப்பிட்டவரோ அத ஏத்துக்கிறதா இல்ல. எங்க ஊருல எல்லாம் ஓட்டல்ல அதுக்குத்தனியா ஆள் வைச்சிருப்பாங்க. சாப்பிட்டவங்க எடுக்கத் தேவையில்லை இங்கதான் புதுசா என்னமோ சொல்றீங்க எனக்கு அது பழக்கம் இல்லன்னு கோவமா சொன்னாரு.
சர்வர் பொறுமையா சொன்னாரு. அய்யா இங்க இதுதான் வழக்கம் அங்க பக்கத்துல பாருங்க சாப்புட்டவங்க கைகழுவுற எடத்துக்குப் பக்கதுல இருக்குற தொட்டில எலையப்போட்டுட்டு கைகழுவிட்டு போறாங்க பாருங்க நீங்க ஏன் அடம் பிடிக்கிறீங்கன்னு கொஞ்சம் நெலவரத்தைப் புரிஞ்சிக்கோங்க நு
சாப்புட்டவர் கேட்டாரு இவ்வளவு காசு சாப்பாட்டுக்கு வாங்குறீங்கள்ல ஒரு ஆளைப் போட்டு எலைய எடுக்கச்சொன்னா ஒரு ஆளுக்கு வயத்துப்பொழப்புக்கு ஆகும்ல நீங்க காசைவாங்கிட்டு அந்த வேலைய எங்க தலையில கட்டுறீங்க இது அநியாயம்ன்னாரு
அதுக்கு நடுவில ஓட்டல் மேனேஜர் அங்க இருந்து விசாரிச்சாரு அங்க என்ன சத்தம் நு
அதுக்கு சர்வர் சொன்னார் இவரு சாப்பிட்ட எலைய எடுக்கமாட்டேன்னு தகறாறு பண்ணுறாருங்க சொன்னா புரிஞ்சிக்க மாட்டீங்குறாரு. எவ்வளவு சொன்னாலும் வாக்குவாதம் பண்ணுறாரு. நு
சாப்பிட்டவர் ஓட்டல் மேனேஜரப்பாத்து சொன்னார் நீங்க சாப்புட்டவர் எலைய எடுக்கனும்னு எழுதிப்போட்டிருக்கனும் .அப்புடி எழுதிப்போட்டிருந்தா நான் இங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டேன். தெரியாம வந்து இப்புடி மாட்டிக்கிட்டேன், நான் வீட்டுல கூட எலை தட்டு எடுக்கிற பழக்கம் இல்ல அதுக்குத் தனியா ஆள் போட்டிருக்கிறேன் இங்க எலைய எடுத்தா என் கெளரவம் என்னாகிறது வேணும்னா அதுக்கு எவ்வளவு நு சொல்லுங்க நான் குடுத்துடுறேன்னு பர்ஸத் தொறந்தாரு.
இப்ப மேனேஜர் நெலமை தர்ம சங்கடமாப் போச்சு. அவர் கொஞ்சம் சமாளிச்சார். ஐயா அதுக்கு சொல்லல இங்க நடமொறை சாப்பிட்டவங்கதான் தான் சாப்பிட்ட எலைய எடுக்கனும். அவங்களோட எச்சில அவங்கதான் சுத்தப்படுத்தனும் இது ஒரு ஒழுக்கம்னாரு
சாப்புட்டவருக்கு கோவம் அதிகமாயிருச்சு ஹலோ ஒழுக்கம் பத்தி எல்லாம் எனக்கு பாடம் நடத்தவேணாம் நீங்க சொல்லுறதைப்பாத்தா அந்த சாப்பிட்ட டேபிளையும் நான் தான் சுத்தம் பண்ணனும்னு சொல்வீங்க போல என்ன அநியாயம் இது ஓட்டலா இல்ல பள்ளிக்கூடமானு கோவமா கேட்டார்
நெலமை சூடாகுது வாடிக்கையாளர் நெறையா வார நேரம். இப்ப மேனேஜர் சர்வரைப்பாத்து சொன்னார் இந்த எலைய மாத்திரம் எடுத்துப்போட்டுரு ஓட்டல்ல பிரச்சனை வளர வேணாமுன்னு பாக்கு றேன்னாரு. அதுக்கு சர்வர் சொன்னார் அய்யா எனக்கு சர்வ் பண்ணுறதுக்கு மாத்திரதான் சம்பளம் தாறீங்க. எலை எடுக்குறதுக்கு டேபிள் தொடைக்கிறதுக்கு எல்லாம் இல்லன்னு கொஞ்சம் கோவமாவே சொன்னாரு.
அப்ப சாப்புட வந்தவர் சொன்னாரு சரி நான் குடுக்குறேன் எவ்வளவு ஆகும் இந்த எலை எடுத்துப்போடன்னு கேட்டார்
அதைக்கேட்டதும் மேனேஜர் டென்சன் ஆயிட்டார் அவர் சாப்புட்டவரைப்பாத்து அய்யா கொஞ்சம் அமைதியா இருங்கனு சொல்லிட்டு சர்வரைப்பாத்து உன்னால இந்த எலைய எடுத்துப்போட முடியுமா முடியாதானு கேட்டார்
இப்ப சர்வர் டென்சனாயிட்டார். நீங்க குடுக்குற சம்பளத்துக்கு சர்வர் வேலைசெய்யிறதே அதிகம். இதுல எலை எடுக்கச்சொல்றீங்க அப்புறம் டேபிள் தொடைக்கச் சொல்வீங்க அப்புறம் பாத்திர பண்டம் கழுவச்சொல்வீங்க விட்டா கக்கூசையும் நு சொல்லி நிறுத்துனாரு
இப்ப சண்டை உச்சத்துக்குபோயிறுச்சி சர்வருக்கும்மேனேஜருக்கும். அப்ப சர்வர் சொன்னாரு நான் மொதலாளிக்கிட்ட கம்ளெயிண்ட் பண்ணுவேன்னு அதுக்கு மேனேஜர் சொன்னார், அதுவரைக்கும் இங்க ஓட்டல் நடக்கனும் உன்னால எலை எடுக்க முடியுமா முடியாதான்னு கேட்டார்.
அப்ப வெளிய சத்தம் கேட்டுச்சு. என்ன நடக்குது இங்க ஒரே சத்தமா இருக்கு இது ஓட்டலா சந்தக்கடையான்னு கேட்டார் ஒருத்தர்
அதைப்பாத்துட்டு மேனேஜர் , வாங்க மொதலாளி இவர் சொன்ன வேலையச்செய்ய மாட்டீங்குறார் ஒரே கழுத்தறுப்பாப் போச்சுன்னார்.
அதுக்கு சர்வர் சொன்னார் மொதலாளி அய்யா அந்த கஸ்டமர் சாப்புட்டு எலைய எடுக்க மாட்டேன்னு சொன்னவன்ன இவர் என்னய எடுக்கச்சொல்றார். என்னான்னு நீங்களே கேளுங்கன்னாரு
மொதலாளி கேட்டார் எந்த டேபிள்னு சர்வர் அதை காமிக்க ஒடனே நேரபோய் மொதலாளி அந்த எச்சில் எலைய எடுத்துக் கொண்டுபோய் எச்சில் தொட்டில்ல போடப்போனார் அதைப் பாத்துட்டு சர்வரும் மேனேஜரும் ஆடிப்போய்ட்டாங்க.
அய்யா நீங்க ஏன்னு கேட்டுக்கிட்டே பின்னாடி போனாங்க , அவர் எலைய தொட்டில போட்டுட்டு கையக்கழுவிட்டு வந்து சொன்னார் அவரவர் வேலையப் பாருங்கனு
சொல்லிட்டு சாப்பிட்டவரைப்பாத்து அய்யா மன்னிச்சிக்கங்க இங்க எலை சாப்பிட்ட வங்கதான் எடுக்கனும் இந்த தடவை பரவா யில்லை. அடுத்த மொறை இது உங்களுக்கு சரின்னு பட்டா இங்க வாங்க இல்ல நு தோணிச் சின்னா வேற ஓட்டல்ல சாப்புட்டுக்கோங்க தவறுக்கு வருந்துகிறேன்னு சொன்னாரு
அப்ப சாப்பிட வந்தவர் கேட்டார் ஏன் இப்படி பேசாம அதுக்கு ஒரு ஆளைப்போடலாமே நு கேட்டார். அதுக்கு மொதலாளி சொன்னார்
ஒங்களுக்குத் தெரியுமா என்னோட அம்மா அப்புடி ஓட்டல்ல எச்சில் எலை எடுத்து டேபிள் தொடச்சி பாத்திரம் தேச்சவங்கதான். சின்ன வயசில அப்பா இறந்துட்டதுனால அம்மா இது மாதிரி ஓட்டல்ல வேலை செஞ்சாங்க. அதுல வார காசை வைச்சித்தான் என்ன வளத்தாங்க
அவங்க கையெல்லாம் புண்ணாயிரும். காலும் புண்ணாயிருக்கும். அதுக்குத் தெனம் ராத்திரி மருந்து போடுவேன் அப்ப அவங்களால தாங்கமுடியாத வலினால கண்ணுல கண்ணீரா வரும். அதை நான் தொடச்சி விடுவேன். எத்தனை பேரோட எச்சில் அதுல எவ்வளவு ஆபத்தான விசயம் இருக்கு சாப்புடுறவங்களுக்கு அது ஒரு ஈசியான வேலை ஏன்னா தன்னோட எலை மாத்திரம் தான் எடுக்குறாங்க அதுவும் அவங்களோட எச்சில்தான். ஆனா அதையே வேலையா செஞ்சா , அதுமட்டுமில்ல நெறையாப்பேர் இலையில பாதிய வீணாக்குறாங்க. அந்த எலைய அவங்களே எடுக்கனும்னா ஓரளவு சுத்தமா சாப்புடுவாங்க இல்லையா
அப்ப நான் முடிவு செஞ்சதுதான் இது. நானே ஒரு ஓட்டல் தொடங்கனும் அதுல எச்சில் எலைய சாப்புட்டவங்கதான் எடுக்கனும். என் அம்மா பட்ட கஸ்டம் யாரும் படக்கூடாதுனு முடிவெடுத்துத் தொடங்குனேன். நு சொல்லிட்டு கடையில மாட்டிருந்த அவரோட அம்மா படத்தைப்பாத்ததும் அவர் கண்ணு கலங்கிடுச்சு.
மேனேஜரை மொதலாளி கூப்புட்டு ”சாப்பிட்டவர்களே தங்களின் இலையை எடுக்கவேண்டிகிறோம்” நு எழுதி வைக்கச்சொன்னாரு.
சாப்பிட்டவருக்கு ஒரு மாதிரி ஆயிப்போச்சு பணத்தைகுடுத்துட்டு மெளனமா வெளியே போனார். அவருக்கும் அவரோட அம்மா கையில் இருந்த புண்ணுக ஞாவகம் வந்துச்சு அதுனாலயே ஓட்டல்ல எலை எடுக்க தயங்குனதும் மனசுல வந்துபோச்சு. அவர் கண்ணும் லேசா கலங்குச்சு....
No comments:
Post a Comment