*சந்தியா வந்தனம்*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
_1. யார் சந்த்யா வந்தனம் செய்ய வேண்டும்?_
*ப்ரம்ஹோபதேசம் ஆன அதாவது பூணூல் போட்டுக் கொண்ட- அனைவரும் செய்ய வேண்டும்.*
_2. அப்போ ப்ராஹ்மணர்கள்தானே செய்ய வேண்டும்?_
*ம்ம்ம். அப்படி இல்லை. அந்தணர், க்ஷத்திரியர், வைச்யர் ஆகிய மூன்று வர்ணத்தவருக்குமே பூணூல் போட்டுக் கொள்ள அதிகாரம் உண்டு. ஆனால் தற்காலத்தில் அந்தணர் மட்டுமே போட்டுக்கொள்கிறார்கள்.*
_3. ஏன் சந்த்யா வந்தனம் செய்ய வேண்டும்?
*பல் தேய்த்தால் பெரிதாக நன்மை ஒன்றும் தெரியாவிட்டாலும் பல் தேய்க்க வில்லையானால் வாய், பல், ஈறு, கெட்டு துர்நாற்றம் வருகிறது; நோய் வருகிறது. அது போல் சந்த்யாவந்தனம் செய்யா விட்டால் தீமை ஏற்படுகிறது; நோய் நொடி ஏற்படுகிறது. அதை தடுக்க சந்த்யாவந்தனம் செய்ய வேண்டும்.*
_4. வேறு காரணம் உண்டா?_
*சந்த்யாவந்தனம் செய்யும் வரை ப்ராம்ஹணத்துவம் நிலைக்கும்; விட்டு விட்டால் நிலைக்காது. சந்த்யா உபாசனை இல்லாமல் மற்ற தெய்வ காரியங்கள் பித்ரு காரியங்கள் என்ன செய்தாலும் பலன் கிடைக்காது.*
_5. அதென்னது? நீங்களா சொல்லறீங்களா?
*சாஸ்திரமே சொல்லுகிறது*
*விப்ரன் எனப்படும் ப்ராஹ்மணன் மரம் போன்றவன். அவனது வேர் சந்த்யை. வேரை வெட்டிவிட்டால் பூவோ, பழமோ கிடைக்காது. சந்த்யை விட்ட ப்ராஹ்மணன் செய்யும் காரியங்களுக்கு பலன் இராது.*
_6. சரி சரி, இன்னும் ஏதாவது?_
*மனு ஸ்ம்ருதியில்*
_*ப்ரஞாம் யச: ச கீர்த்திஞ்ச ப்ரஹ்ம வர்சஸ மேவச ||*_
*நீண்ட காலம் சந்த்யாவந்தனம் செய்த மஹரிஷிகள் நீண்ட ஆயுளை அடைந்தனர். அறிவு, நற்பெயர், புகழ், ப்ரஹ்ம வர்சஸ் இவற்றையும் பெற்றனர்.*
_7. வேதம் என்ன சொல்லுகிறது?_
*வேதம் சந்த்யை பற்றி 'ஸகலம் பத்ரமச்னுதே' என்கிறது. அதாவது எல்லாவித நன்மையையும் பெறுகிறான்.*
_8. மோக்ஷத்தையே கொடுக்கும்ன்னு யாரோ சொல்லிகிட்டு இருந்தாங்க. அது கொஞ்சம் 'டூ மச்' தானே?_
*டூ மச் இல்லை. சந்த்யாவந்தனத்தில் வரும்*
_*அஸாவாதியோ ப்ரஹ்மா ப்ரஹ்மைவ ஸத்யம்; ப்ரஹ்மைவாஹமஸ்மி'*_
*என்ற த்யானம் மோக்ஷ சாதனமாகும்*
*இந்த சூரியன் ப்ரஹ்மம்; ப்ரஹ்மமே சத்தியம்; நான் ப்ரஹ்மமாகவே இருக்கிறேன்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment