இடுக்கு பிள்ளையார்...! திருவண்ணாமலை. இந்த இடுக்கு பிள்ளையார் சந்நிதிக்கு, ஒரு பகுதி வழியாக உள்ளே சென்று மறுபகுதி வழியாக வெளியேற வேண்டும். படுத்த நிலையில் ஊர்ந்தபடி உடலை குறுக்கிக் கொண்டுதான் இந்த பிள்ளையாருக்குள் நுழைந்து வெளியே வரமுடியும். இதனால் பெண்களுக்கு கர்ப்பப் பை கோளாறுகள் நீங்குவதாக நம்புகிறார்கள். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தாலும் இடுக்கு பிள்ளையார் சந்நிதிக்குள் சென்று வந்தால் பலன் கிடைக்கும். இந்த இடுக்கு பிள்ளையாருக்குள் இடைக்காட்டு சித்தர் மூன்று யந்திரங்களை பதித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த யந்திரங்கள் தரும் அதிர்வு காரணமாகத் தான் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் விலகுவதாக நம்புகின்றனர் இடைக் காட்டுச் சித்தர் இக்கோயிலில் மூன்று யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளார். அங்கு ஊர்ந்து செல்லும்போது, சித்தர் அமைத்த யந்திரங்கள் உடலின் மீது படுகின்றன. இதனால் அந்த யந்திரங்களிலிருந்து வெளிப்படும் சக்தி, கை - கால் வலி, வயிற்று வலி மற்றும் தீராத எந்த நோயையும் தீர்ந்துவிடுகின்றன' என்பது நம்பிக்கை.. ஏவல், பில்லி, சூன்யம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், இந்த இடுக்குகளில் நுழைந்து வந்தால், அவர்கள் அதிருந்து விடுபடுகின்றனர் என்கிறார்கள். தவிர, எத்தனை முறை நுழைந்து வணங்கி வருகிறோமோ, அத்தனை பிறவிகள் குறையும் என்பதும் இங்கே காணும் உறுதியான நம்பிக்கை. . இந்த ஆலயத்தில், நேர்கோட்டில் அமையாத நிலையில் மூன்று வாசல்கள் உள்ளன. பின்வாசல் வழியாக நுழைந்து, ஒருக்களித்து படுத்தவாறு வளைந்து, தவழ்ந்து, 2-வது வாசலில் நுழைந்து, முன்வாசல் வழியாக வெளிவர வேண்டும்.. இவ்வாறு வந்து இடுக்குப் பிள்ளையாரை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், இக்கோவிலில் நுழைந்து வருவதால் தலைவலி, பில்லி சூனியம், உடல் வலி, பிற நோய்கள் தீரும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. கிரிவலம் வருவோருக்கு வலி குறையும் என்பது ஐதீகம்..✍🏼🌹
No comments:
Post a Comment