ஆடி மாத ஸ்பெஷல் இனிப்பு கொழுக்கட்டை*
தேவையானவை: வறுத்த பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், வெல்லத்தூள் - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், தண்ணீர் - ஒரு கப்.
செய்முறை: பாத்திரத்தில் வெல்லத்தூள், தண்ணீர் சேர்த்துக் கலக்கி அடுப்பில் வைக்கவும்.
கரைந்ததும் எடுத்து வடிகட்டி, திரும்பவும் அடுப்பில் வைக்கவும்.
இதில் தேங்காய்த் துருவலை சேர்க்கவும்.
கொதி வர ஆரம்பித்ததும் மாவைப் போட்டு கட்டி தட்டாமல் கிளறவும் (தீயைக் குறைத்து வைக்கவும்). வாணலியை மூடி வைக்கவும்.
இடையிடையே திறந்து நன்கு கிளறி, நெய் விட்டுக் கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
ஐந்து நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
பிறகு கொழுக் கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
🎈🧸🎈
No comments:
Post a Comment