ஆடி மாத ஸ்பெஷல் கீரை வடை*
தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், சுத்தம் செய்து நறுக்கிய முளைக்கீரை - கால் கப், சோம்பு - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை முக்கால் மணி நேரம் ஊறவிடவும்.
பிறகு, நீரை வடித்துவிட்டு, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்துக் கலக்கி, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
🎈🧸🎈
No comments:
Post a Comment