Wednesday, July 27, 2022

அன்பில் மாரியம்மன் கோயில்

ஆடி ஸ்பெஷல் பகுதி 10

*அன்பில் மாரியம்மன் கோயில் பற்றி பார்ப்போம்,அன்புடன் கார்த்திகேயன் தெட்சணமுர்த்தி*

   🕉🌿லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உட்பட்ட உபகோவில் ஆகும். 

🕉🌿சுமார் 700 ஆண்டுகள் பழமையான கோவில், இத்திருக்கோவிலில் கொள்ளிடம் ஆற்றில்  வெள்ளம் வரும்பொழுது வேப்பமரத்தடியில் அம்மன் தங்கியதாக கூறப்படுகிறது.      

🌿🕉இத்திருக்கோவிலை முதலாங்க  சக்கரவர்த்தி கட்டியதாக கூறப்படுகிறது.

  🕉🌿 சமயபுரம், நார்த்தா மலை, வீரசிங்க பேட்டை, கண்ணனூர், புன்ணை நல்லூர், திருவேற்காடு, அன்பில் மாரியம்மன்  ஆகிய சிறப்பு மிக்க அம்மன் ஸ்தலங்களில் அன்பில் மாரியம்மன் மற்ற அனைத்து அம்மனுக்கும் மூத்தவளாம்,      

🕉🌿அன்பில்  மாரியம்மனுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன. சமயபுரம் மாகாளிகுடி கோயில் அருகில் வலது புறத்தில் ஓர் தெய்வீக வீட்டில் புற்றோடு தன் குழந்தையோடு தங்கை மகமாயி அனுமதியோடு அமர்ந்திருக்கிறாள், மற்ற திருக்கோவில்களில் அம்மனுக்கு குழந்தை கிடையாது,               

🕉🌿 குழந்தை வேண்டி அம்மனை வழிபட்டால் பலன் கிடைக்கும்.    

🕉🌿கண் சம்பந்தமான நோய்கள் தீர இந்த அம்மனை  வழிபடலாம்.             

🕉🌿அம்மை இருக்கும் காலத்தில் இந்த கோவிலில் வந்து தங்கி பூஜை செய்தால் பலன் கிடைக்கும்..

🕉🌿தல விருட்சம் : வேம்பு மரம்.

🕉🌿நண்பகல் 12.00  மணியளவில் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு பூசாரியால் பச்சிலை மூலிகைகளால் ஆன சாறு கண்களில் பிழிந்து  விடப்படுகிறது.  இதனால் ஏராளமான பக்தர்கள் கண் நோயில் இருந்து குனமடைவதாக நம்பப்படுகிறது.

  🕉🌿பூஜை விவரம் : வருடபிறப்பு, ஆடிவெள்ளி, தைவெள்ளி, அமாவசை, பௌர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும்.

🕉🌿திருவிழாக்கள் கிழ் வருபவை,
வைகாசி - 5 ம் நாள் பஞ்சப்பிரகார உற்சவம், 6 – ம் நாள் விடையாற்றி நடைபெறும்.ஆனி - மகா சண்டி ஹோமம் நடைபெறும்.
பங்குனி - முதல் ஞாயிறு பூச்சொரிதல் நடைபெறும் பின்னர் 15 நாள் அம்மன் விரதம், அந்த சமயத்தில் அம்மனுக்கு மாவிளக்கு  மட்டும் படையல் வைக்கப்படும். பங்குனி - இரண்டாம் ஞாயிறு அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் கோவிலை வலம் வருவர். பங்குனி - மூன்றாவது ஞாயிறு குடியேறுதல் பின்னர் அடுத்தல் பத்து நாட்கள் திருவிழா,  கண்ணாடி பல்லக்கு திருத்தேர்  நடைபெறும்.           

🕉🌿 நடைதிறப்பு - காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை , மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி

No comments:

Post a Comment