Wednesday, July 27, 2022

ஸ்ரீ தேவர் பிரான் திருக்கோவில்

🕉️🙏 இன்றைய கோபுர தரிசனம் 🙏🕉️*

*🕉🙏ஓம் நமோ நாராயணாய நம🙏🕉️*

*🕉️🙏நவ திருப்பதிகளில் இன்று...*

*🕉️அருள்மிகு அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ நிவாசன், ஸ்ரீ தேவர் பிரான் திருக்கோவில்🕉️*

🔆தொலைவிலிமங்கலம்,தூத்துக்குடி மாவட்டம்

*தலம் :ராகு தலம்*

*🔆சுப்ரபர் என்ற முனிவர் ஒரு யாகம் இயற்றுவதற்காக பூமியை உழுது பண்படுத்தினார், அப்பொழுது நிலத்திலிருந்து ஒரு தராசும் வில்லும் கிடைத்தது, தராசு ஒரு பெண்ணாகவும் வில் ஒரு ஆணாகவும் மாறி தங்கள் சாபத்திலிருந்து விடுபட்டு முக்தியடைந்தனர்*

*🔆இத்திருத்தலத்தில் துலையும் (தராசும்) வில்லும் முக்தியடைந்ததால் இத்தலம் துலாவில்லிமங்கலம் எனப் பெயர் பெற்றது, தற்போது மருவி தொலாவில்லி மங்கலம் என்று அழைக்கப்படுகிறது*

*🔆நவகிரகங்களில் ராகு தலமாக அமைந்துள்ளதால் ஜாதகத்தில் ராகு தோஷம் உள்ளவர்கள், காலசர்ப்ப யோகம் உள்ளவர்கள், திருமணம், புத்திர பாக்கியம் போன்றவற்றில் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் ராகுவின் பாதிப்பு குறைந்து வாழ்க்கையில் தாங்கள் விரும்புவதை அடைந்து சுகம் பெறலாம்*

*🔆பணம், சொத்து, பொருள், நிதி, தடைகள் நீங்கி கிடைக்கவும், வியாதிகள் தொல்லைப்படுத்தாமல் ஒதுங்கி செல்லவும், பிரார்த்தனைகள் ஜெயிக்கவும் இரட்டை திருப்பதி என்னும் இந்த தலத்திற்கு வந்து என்னென்ன பிரார்த்தனைகளை முறைப்படி செய்ய வேண்டுமோ அதை செய்தால் புனிதனாக மாறி நிம்மதியான வாழ்க்கையை பெறலாம்🙏🕉️*

No comments:

Post a Comment