*3️⃣0️⃣0️⃣ ஆண்டுகள் பெருமை மிகு பெருநகர மாநகராட்சியில் பிறந்த நாள் வசிப்பதிலும் அதில் பணியாற்றுவதிலும் உள்ள வரலாற்று பெருமைகள்/உண்மைகள்*
*மதராஸ் பட்டணம்*
அப்போது மதராஸ் பட்டணத்தை வடக்கு மதராஸ் தெற்கு மதராஸ் என்று அழைப்பார்கள்.
வடக்கு மதராஸை 'டவுன்’ என்று அழைப்பார்கள்.
சர் ஜார்ஜ் மூர் ஏற்படுத்தியது ஜார்ஜ் டவுன்.
இந்தப் பகுதியில்தான்கல்லூரிகள் வியாபார நிறுவனங்கள் ஹை கோர்ட் துறைமுகம் எல்லாம் இந்த 'டவுன்’ பகுதியில்தான் இருந்தன.
'மதராஸ்’ என அழைக்கப்பட்ட அந்தக் காலம் முதற்கொண்டு சென்னை என்று அழைக்கப்படும் இந்தக் காலம்வரை சுவையாக சூடாகப் பல ஹோட்டல்கள்
நமது தருமமிகு சென்னையில் இருந்தன.
பெரும்பாலான ஹோட்டல்கள் வாசலில் 'பிராமணாள் காபி ஓட்டல்’ என்று பலகைகள் தொங்கும்.
'மெட்ராஸ் பிரசிடென்ஸி’ என்று அழைக்கப்பட்ட சென்னை மாகாணம் இருபத்தாறு ஜில்லாக்களைக் கொண்டு மிகச் சிறிய பல பகுதியாக இருந்தது
பல பகுதிகள் காடாகவும் கட்டாந்தரையாகவும் தோப்புகளாகவும் இருந்தன.
தங்கசாலைத் தெருவில் (Mint street)'காசி பாட்டி ஹோட்டல்' என்று ஒரு ஹோட்டல் இருந்தது.
ஒரு பிராமண பாட்டி காசிக்குச் சென்று வந்தார்.
போற இடத்துக்குப் புண்ணியம் கிடைக்க வேண்டுமென்று இந்த ஹோட்டலைத் தொடங்கினார்.
அவருடைய 🍛சமையல் சுவையாக இருந்தது கூட்டம் சேர ஆரம்பித்தது
அந்த நாளில் ஹோட்டல் நடத்துபவர்கள் 'தாங்கள் செய்வது வியாபாரமல்ல அன்னதானம்’ என்றுதான் நினைத்தார்கள்.
'லாபத்தைவிட புண்ணியம்தான் பெரிது’ என்று நம்பினார்கள்.
அதனால்தான் அந்த நாளில் ‘அளவுச் சாப்பாடு’ என்ற பேச்சே கிடையாது
காசி பாட்டி ஓட்டலில் எஙடுப்புச்சாப்பாட்டின் விலை இரண்டணா.நெய் தாராளமாகவே பரிமாறப்படும்.
தங்கசாலைத் தெருவில் 'சீனிவாஸ் பவன்’ மிகவும் புகழ்பெற்றது.இந்த ஹோட்டல் மாலை ஏழு மணிக்குத் திறக்கப்படும். நள்ளிரவைத் தாண்டி மூடப்படும்
இங்கு விசேஷம் என்ன ஈன்றால் பூரியுடன் ‘பாசந்தி’தான் கொடுப்பார்கள்
உருளைக்கிழங்கு கறி வேண்டு மென்றால், முதலிலேயே சொல்ல வேண்டும்.இல்லை யென்றால் பாசந்திதான் வரும்.
இங்கு பூரி – பாசந்தி சாப்பிடுவதற்காக மயிலாப்பூரிலிருந்து பலர் இரவில் காரில் வருவார்கள்.
தேவராஜ முதலித்தெரு பகுதியில் வெங்கட்ராம ஐயர் ஹோட்டல் இருந்ததுஇங்கு சாப்பாடு பிரபலம் தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும் மேஜை, நாற்காலி கிடையாது.
இங்கு என்ன விசேஷம் என்றால் ஒவ்வொரு நேரத்துக்கும் ஒரு கறிகாய் கிடைக்கும்.
கூட்டம் அலைமோதுவதால் பரிமாறப்படும் காய்கறிகள் உடனே தீர்ந்துவிடும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உருளைக்கிழங்கு பொரியல் என்றால் அரைமணி நேரம் கடந்து சென்றால் வாழைக்காய் பொரியல் பரிமாறப்படும்.
அடுத்து கருணைக்கிழங்கு பொரியல் கிடைக்கும்.ழ
பலர் டிக்கெட் வாங்குவதற்கு முன்பு ‘இப்ப என்னய்யா பொரியல்? என்று கேட்டு வாங்குவார்கள்.
தம்புச்செட்டித் தெரு
அப்போது மதராஸ் ஹை கோர்ட்டில் நாலாயிரம் வக்கீல்கள் இருந்தார்கள்.
👨🏻⚖️கோர்ட்டுக்கு வரும் கூட்டம் அதிகமாக இருந்தது.
அவர்களை நம்பி துவங்கப்பட்ட ஹோட்டல்கள் ஏராளம்.
தம்புச்செட்டித் தெருவில் இப்படிப்பட்ட ஹோட்டல்கள்
தஞ்சாவூர்,
திருநெல்வேலி,
மதுரை,
உடுப்பி,
பாலக்காடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிராமணர்கள் வசம் இருந்தன.
1920ல்
தம்புச்செட்டித் தெருவில் மனோரமா லஞ்ச் ஹோம் என்ற ஹோட்டல் ஏ.நாராயண சுவாமி ஐயர் நடத்தினார்.
இந்த ஹோட்டலில் அனைத்துமே நெய்யில் தான் செய்யப்பட்டிருக்கும்.
தம்புச்செட்டித் தெருவில் வக்கீல் குமாஸ்தாக்கள் சங்கத்தினர் ஒரு கேன்டீனைத் தொடங்கினார்கள்.
இந்த ஹோட்டலில் வியாபாரம் பிற்பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரைதான் நடைபெறும்.
இரண்டு மணிக்குப் பிறகு மிஞ்சியிருக்கும் இட்லி போண்டா வடை போன்றவற்றைப் பாதி விலைக்கு விற்றுவிட்டுஹோட்டலை மூடிவிடுவார்கள்.
தம்புச்செட்டித் தெருவில் ஹோட்டல் வைத்தால் லாபம் கொழிக்கும் என்று பலர் நம்பிஇந்தத் தெருவுக்கு வந்தார்கள்
ஹோட்டல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட சரித்திரம் படைத்த ஹோட்டல் தாசப்பிரகாஷ் புகழ் கே.சீதாராம ராவ் இங்குதான் ஹோட்டல் வைத்து வளரத் தொடங்கினார்.சீதாராம ராவ்
இந்தத் தெருவில் ஒரு லாட்ஜையும் கட்டினார்.
தனது பணியாளர்களை சென்ட்ரல் எக்மோர்ஸ்டேஷன் போன்ற இடங்களுக்கு அனுப்பி மதராசுக்கு வரும் ரயில் பயணிகளைத் தன் விடுதிக்கு அழைத்து வர ஏற்பாடுகளைச் செய்வார்.
உலகளவில் மிகப் பிரபலமாக நேசிக்கப்படும் 'மசாலா தோசையை மதராசில் அறிமுகப் படுத்தியவர் இவர்தான்
நெய்யில் செய்யப்பட்ட'மைசூர் மசாலா தோசை’விலை அரையணா என்று வாசலில் ஒரு கரும்🗒️ போர்டில் எழுதிவைத்திருப்பார்.
அப்போது ஒரு 🪙ரூபாய்க்கு பதினாறு அணாக்கள்.ஒரு அணாவுக்கு நாலு காலணாக்கள் அல்லது பன்னிரண்டு தம்பிடிகள்.
அதாவது ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடிகள்.பன்னிரண்டு தம்பிடிகள் கையில் இருந்தாலே வயிறு நிறையச் சாப்பிடலாம்.
மைசூர் போண்டா என்ற சுவையான மாலைப் பலகாரத்தை மதராசுக்கு அறிமுகம் செய்தவர் சீதாராம ராவ்தான்.
உடுப்பி சமையல் முறையில் சாம்பார் ரசம் ஆகியவற்றில் வெல்லத்தைச் சற்றுக் கலப்பார்கள்.இதற்குத் தனியான சுவை உண்டு.
இரண்டு இட்லிக்கு இரண்டு பக்கெட் சாம்பார் சாப்பிடுபவர்கள் அந்த நாள் அதிகம் உண்டு.
நான் இரண்டு இட்லி இரண்டு பக்கெட் சாம்பார் ஆசாமி என்று சொல்லிப் பெருமைப் படுவதில் அந்த நாளில் பலர் இருந்தனர்.
பிராட்வே
‘பிராட்வே’ என்றழைக்கப்படும் குறுகிய சாலையில் பல பிரபலமான ஹோட்டல்கள் இருந்தன.
‘சங்கர் கபே’ என்ற ஹோட்டலைசங்கர ஐயர் என்பவர் நடத்தினார்.
இவரை ஹோட்டல் தொழிலில் பிதாமகன் என்பார்கள். இந்த ஹோட்டலில் வியாபாரம் அமோகமாக நடந்தது.
பின்னாளில் இந்த இடத்தில்தான் 'அம்பீஸ் கபே’ என்ற ஹோட்டல் இயங்கியது.இன்று முழுமையாக மறக்கப்பட்ட மற்றொரு உணவகம்.
மதராசில் மிகப் பிரபலமான துணி வியாபாரிகள் கிஷன்சந்த்ஸ் - செல்லாராம்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் சிந்திக்காரர்கள் கராச்சியிலிருந்து வந்தவர்கள் சிந்து நதியின் செழிப்பில் வளர்ந்த பணக்காரர்கள்.
ஹை-கோர்ட்டுக்கு எதிரில், பாம்பே மியூச்சுவல் கட்டடத்துக்கு அருகே 'கராச்சி கபே’ என்ற ஹோட்டலைத் தொடங்கினார்கள்.
மதராஸ் பட்டணத்தில் முதன்முறையாக ☃️ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட ஒரு தனியறை இந்த ஹோட்டலில் இருந்தது அந்த நாளில் சரித்திரம் படைத்தது.
பலர் இந்த ஹோட்டல் வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.
உள்ளே போனா குளிருமாமே என்று மூக்கின்மேல் விரலை வைத்து ஆச்சரியப்படுவார்கள்.
இந்த ஹோட்டலில் "கராச்சி அல்வா’ என்பது மிகவும் பிரபலம்.
அந்த நாளில் தித்திப்புப் பண்டங்களுக்கு வடஇந்திய அடையாளத்தோடு பெயர்கள் வைப்பார்கள்.
காசி அல்வா,
டெல்லி பாதுஷா,
கல்கத்தா மல்கோவா,
பாம்பே அல்வா,
இப்படிப் பல பெயர்கள்.
இவற்றின் விலை இரண்டணாதான்.
பாதாம் அல்வாவுக்கு என்றுமே தனிச் சிறப்பு உண்டு.அதன் விலை மூனணா.
‘இந்த அல்வா வேண்டும்’ என்று ஒருவர் கேட்டால்அவர் மிகப் பணக்காரர் என்று அர்த்தம்.எல்லோரும் அவரையே பார்ப்பார்கள்.
திருவல்லிக்கேணி
பாதாம் அல்வா என்றால்நினைவுக்கு வருபவர் கோயம்புத்தூர் கிருஷ்ண ஐயர்தான்.
திருவல்லிக்கேணி பைகிராஃப்ட்ஸ் சாலையில் இருந்ததுமிகப் பிரபலமான இந்த ஹோட்டல். உள்ளே சென்றால் படாடோபம் இல்லாத ஒரு நடுத்தர வீடு போல இருக்கும்.
வக்கீல்கள் எழுத்தாளர்கள்📝சினிமாவுலகப் பிரமுகர்கள் அன்றைய சென்னை நகரத்தின் பல பிரபலங்கள் இவர்களை இந்த ஹோட்டலில் அடிக்கடிப் பார்க்கலாம்.
சரித்திரம் படைத்த எஸ்.எஸ்.வாசன்கல்கி போன்றவர்களும் இங்கு வருவார்கள்.
பாதாம் அல்வா சாப்பிடுவதற்கென்றே மதராஸ் பட்டணம் பல பகுதிகளிலிருந்து இங்கே வருவார்கள்🚘🛺🚞
மயிலாப்பூர்
அதுபோலவே மயிலாப்பூரில் 'ராயர் ஓட்டல்’ மிகவும் பிரபலம்.
'இங்கு இட்லி சாப்பிட்டால்தான் காரியங்கள் சரியாக நடக்கும்’ என்று அந்த நாளில் நினைத்தவர்கள்
ஹோட்டலுக்கு ரெகுலர் கஸ்டமர்கள்.
சினிமாக்காரர்கள் பலர் வருவார்கள் அவர்களில் ஒருவர் ஜெமினி கணேசன்.
தியாகராஜ நகர் பாண்டி பஜார். இங்கே கீதா கபே என்ற ஹோட்டல் இருந்தது.
கார்த்தால பொங்கல் சாப்பிட பல ஆந்திர நடிகர்கள் வருவார்கள்.
ரங்கநாதன் தெருவில் பட்ஸ் ஹோட்டல் நாதனஸ் கேஃப் இருந்தது.
ராயப்பேட்டையில் சர்மானி ஹோட்டல் இருந்தது.
உணவக வியாபாரம் சிலருக்குப் புண்ணியத்தை மட்டுமல்லாமல் பணத்தையும் வாரிக் கொடுத்தது.
பெருமளவில் வளர்ச்சி கண்டவர்கள்
வி.ஆர்.ராமநாத ஐயர் சி.எம்.சர்மா கே.சீதாராம் ராவ் ஆகியோர்.
ஐயருக்கும் சர்மாவுக்கும் மதராஸ் நகரத்தில் நூறு வீடுகள் சொந்தமாக இருந்ததாக அந்த நாளில் பரபரப்பாகப் பேசுவார்கள்.
அதே அளவில் வளர்ந்தவர் உடுப்பியைச் சேர்ந்த உட்லாண்ட் கே.கிருஷ்ணாராவ்.
இன்று உலகெங்கும் புகழைப் பரப்பிய உட்லண்ட்ஸ் உணவகத்தையும் விடுதியையும் நிறுவியவர் இவர்தான்.
இட்லி மாவு அரைக்கும் சாதாரண தொழிலாளியாக மதராஸ் பட்டணம் வந்தவர்.
மவுண்ட் ரோடு பகுதியில் 'உடுப்பி கிருஷ்ண விலாஸ்’ என்று பல பெயர்களில் வெற்றியைக் கண்டவர்.
சில கூட்டாளிகளுடன் சேர்ந்து, ராயப்பேட்டை பகுதியில் ஒரு ஜமீன்தாருக்குச் சொந்தமான இடத்தை வாங்கி, உட்லண்ட்ஸ் ஓட்டல் நிறுவினார்.
இது, இன்றைய அளவிலும் இயங்குகிறது. அதற்குப் பிறகுதான் ராதாகிருஷ்ணன் சாலையில் இன்னொரு ஓட்டலைத் தொடங்கினார்.
இரண்டாவது உலகப்போர் ஏற்பட்ட சமயம். ஜப்பான்காரன் மதராஸ் பட்டணத்தில் அணுகுண்டு போடுவான் என்ற பயத்தில் பட்டணம் காலியானது.
கல்லூரிகள் பள்ளிக்கூடங்கள் எல்லாம் மூடப்பட்டன.
ஹை கோர்ட் கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டது.
குண்டு பயத்தினால் டவுன் பகுதியில் பல ஹோட்டல்கள் மூடப்பட்டன.
அந்தப் பயம் நீங்கிய பிறகு மீண்டும் தொடங்கப்பட்டன.
ஆனால் மீண்டும் தொடங்கப்படாமலே மறைந்தது. ‘கராச்சி கபே’..!
*வலைப்பதிவில் பெற்றதும் பகிர்வதும்*
✍🏻💝 *அன்புடன் 🌞பானு🌕சந்திரன்(Man Of Success 😎)*💞
No comments:
Post a Comment