Tuesday, July 19, 2022

பாடலாத்ரி நரசிம்மர் கோயில்

இன்னிக்கு நாம பார்க்கப் போறது திருக்கழுகுன்றம் போயிட்டு  திரும்பி வரும் வழியில் செங்கல்பட்டுலிருந்து சென்னை செல்லும் வழியில் இருக்கும் சிங்க பெருமாள் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கினால் பக்கத்திலே இருக்கும் கோவில்  

🌿 அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் 🌿        

                        திருக்கோயில்.

🍒 மூலவர்   பாடலாத்ரி நரசிம்மர்
🌹 உற்சவர்   பிரகலாதவரதர்
🌹அம்மன்/தாயார்  அஹோபிலவல்லி
🌹தல விருட்சம்    பாரிஜாதம்
🌹தீர்த்தம்   சுத்த புஷ்கரிணி

🍒 கோவிலின் முகப்பு நுழைவாயிலை தாண்டியவுடன் காணப்படும் வெளி பிரகாரம் கோவில்முகப்பில் சதுரம் கட்டு சதுரம் என்ற அமைப்பில் 2முழு தூண்களும் சுவரை ஓட்டி  2  தூண்களும் காணபடுகின்றன

⭕ கோவிலுக்குள் நுழைந்தவுடன் வெளிப்புற சுற்று மலை சுற்றாக அமையும் கோவிலின் வெளிப்புறத்தில விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் சிலை மேனிகளாக காணபடுகின்றன.பக்கவாட்டு சுவரில் ஸ்தல வரலாறு குறிக்கப்பட்ட குறிப்பும் காணப்படுகின்றது

🍒அதை தாண்டி ஆலய மண்டபத்திற்கு வந்தால் மூலவர் உற்சவர் சன்னதிக்கு போகும் வழி காணப்படுகிறது

🍒அதன் வழியாக மூலவராகிய நரசிம்மர் சுகாசனத்தில் நான்கு கைகளில் கதையுடனும்,  வல பின்கையில் சக்கரமும்,  இட பின்கையில் சங்கும் கொண்டு,  வல முன்கை காக்கும் முத்திரையிலும்,  இடதுகை முன் தொடையிலும் அமைந்தவாறு,  வலது காலை மடித்துக் கொண்டு,  கீழே நீட்டபடுள்ள  இடது காலை தாமரை மலர்மேல் வைத்துக் கொண்டு "த்ரிநேத்ரதாரியாய்'' (மூன்று கண்களுடன்) திருமார்பில் மகாலஷ்மியோடு, சாளக்கிராம மாலை, ஸஹஸ்ரநாத மாலை மற்றும் லஷ்மிஹாரங்நாம மாலை மற்றும் லஷ்மி ஹாரங்களுடன் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சி தருகிறார்.

🍒பாடலாத்ரி நரசிம்மரின் உற்சவரின் திருப்பெயர் ஸ்ரீ பிரகலாத வரதர் ,ஸ்ரீ தேவி ,பூதேவி உடன் காணபடுகிறார்  வரதரின் பின் கைகள் சங்கு சக்ரம் ஏந்திய நிலையில் வலக்கை காக்கும் அமைப்புடனும் இடக்கை கதையுடனும் தேவியர் ஒருகையை நெகிழ்வாகவும் மற்றொரு கையில் மலர்களை கொண்டுள்ளனர்

எல்லாம் தரிசித்துவிட்டு வெளிவாயிலுக்கு வரும் போது,  நமக்கு பிடித்தமான கோயில் பிரசாதங்கள் புக் மற்றும் பாடல்கள் எல்லாம் கொண்ட ஸ்டால் இருக்கு.  அதையெல்லாம் பார்த்துட்டு எஸ்கேப் ஆக பார்த்த என்னை ஒரு முறை முறைச்சு  பிரசாதம் வாங்க வச்ச பிறகுதான் என்னை வெளிலயே விட்டார் ஸ்டால் ஓனர். பின்னே, பதிவை தேத்த அவரை பிடிச்சு அரை மணி நேரம் பிளேடு போட்டு எதும் வாங்காம போனா, முறைக்காம என்ன பண்ணுவார்!!  

🦐ஒரு பெரிய பாறை மேல  இந்த கோவில் இருக்கு. அந்த பாறை மேல ஏறிக்கிட்டே  இந்த கோவிலின் ஸ்தல வரலாறை சிறிது பார்ப்போமா?!

🌹 மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அநேகமாக நரசிம்ம  சுவாமி எல்லா முக்கிய திருத்தலங்களிலும் பல ரூபத்தில் எழுந்தளியிருக்கிறார். இறைவன் தூணிலும் இருப்பான், இரும்பிலும் இருப்பான். அவன் தான் மேலான தெய்வம். ஆகையால் பலராலும் வற்புறுத்தியும் பிரகலாதன் தன் தந்தையான இரணியனை கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இரணியனானவன் சாகாவரம் பெற்றிருந்தான். இறப்பு என்பது அவனுக்கு பகலிலும் நேரக்கூடாது. இரவிலும் நேரக் கூடாது, வீட்டின் உள்ளேயும், வெளியேயும் நேரக்கூடாது. வெளியேயும் நேரக் கூடாது.ஆகாயம், பூமி, நெருப்பு, நீர், காற்று இவற்றினாலும் இறப்பு கூடாது. ஆயுதம், மிருகம், மனிதன் எதனாலும் தனக்கு இறப்பு வரக்கூடாது என்ற மிகப் பெரிய சாகா வரத்தை பெற்றிருந்தான்

🦐 பிரகலாதன், இறைவன் தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கவில்லை. ஆனால் மகாவிஷ்ணுவானவர் சிறுபாலகனின் ஆணித்தரமான "இறைவன் எங்கும் உள்ளான்'' ன்ற சொல்லை நிலை நாட்டுவதற்காகவும், மெய்ப்பிக்கவும் மாலை வேளை துவாரப்ரதேசத்தில் (வாயிற்படியில்) நரமிருக ரூபியாய் (மனித உடல் சிங்கமும்) அவதாரம் செய்து நகங்களினாலே இரணியனை ஸம்ஹாரம் (வதம்) செய்தார்.

🍂 அதுசமயம் அவர் (மஹா உக்ரத்தில்) பெருஞ்சினத்துடன் மூன்று கண்களுடன் காணப்பட்டார். இத்திருக்கோவிலைச் சுற்றி அடர்ந்த காடு இருந்தது. அந்தக் காட்டில் ஸப்த (ஏழு) ரிஷிகளுள் ஒருவரான ஜாபாலி இறைவனை நேரில் காண வேண்டி தவமிருந்தார். அவரின் வேண்டுக்கோளுக்கிணங்கி இரணியனை ஸம்ஹாரம் செய்த திருக்கோலத்துடன் உக்கிர நரசிம்மராக அதே கோபத்துடன் இந்த திருத்தலத்தில் சிறு குகையினுள் காட்சி கொடுத்ததாக  புராணத்தில் விரிவாகவும் சிறப்பாகவும் கூறப்பட்டுள்ளது.

🍒இந்த கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த குடவரை கோவிலாகும். இதில் கிழக்குமுகமாக அமையபெற்ற ஒரு தள கோபுரம் ஒரு பாறையின் மீது அமைக்கப்பட்டுள்ளது

🍎 சுவாமி குகைக்குள் வீற்றிருப்பதால் கோவிலை வலம் வருபவர்கள் சுமார் நூறு படிக்கட்டுகள் கொண்ட சிறு குன்றினையும் சேர்த்து தான் வலம் வரவேண்டும் ஆகையால் இக்கோவிலுக்கே உரித்தான த்ரிநேத்ர தரிசனம், கிரிவலம் இக்கோவிலின் சிறப்பாகும்.

🌹  தெய்வீக அதிசயகுணம் படைத்த அழிஞ்சல் மரம் இதன் சிறப்பு நாச்சியார் திருமொழியின் விரிவுரையில் 44-வது பாசுரத்தில் விளக்கப்பட்டுள்ளது. மணமாகாதவர்களும்,  குழந்தை பேறு இல்லாதவர்களும்,  மாமேதை ஆகும் எண்ணம் உள்ளவர்களும்( இந்த மூணுல எதுமே செட்டாகலையே! அப்புறம் நீ ஏன் போனேன்னு கமெண்ட்ல கலாய்க்க கூடாது!!. ) தாங்கள் அணிந்திருக்கும் ஆடையிலிருந்து ஒரு சிறு துண்டு கிழித்தெடுத்து இம்மரத்தின் கிளையில் எம்பெருமானை நினைத்து ஒரு நுனியில் கட்டி மரத்தின் அடியில் மஞ்சள், குங்குமம் பூசி, நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் அருள்கிட்டும். இது மகான்கள் கண்ட உண்மை. தெய்வாம்சம் பொருந்திய மரம் கோவில் கிரி பிரதட்சிணத்தில் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது.

 பதிவின் நீளம் கருதி ,இதன் தொடர்ச்சியாக மாலையில் இதன் தொடர்ச்சிபதிவு செய்யப்படும். 

🌳 தெய்வீக அதிசயகுணம் படைத்த அழிஞ்சல் மரம் இதன் சிறப்பு நாச்சியார் திருமொழியின் விரிவுரையில் 44-வது பாசுரத்தில் விளக்கப்பட்டுள்ளது. மணமாகாதவர்களும்,  குழந்தை பேறு இல்லாதவர்களும்,  மாமேதை ஆகும் எண்ணம் உள்ளவர்களும்( இந்த மூணுல எதுமே செட்டாகலையே! அப்புறம் நீ ஏன் போனேன்னு கமெண்ட்ல கலாய்க்க கூடாது!!. ) தாங்கள் அணிந்திருக்கும் ஆடையிலிருந்து ஒரு சிறு துண்டு கிழித்தெடுத்து இம்மரத்தின் கிளையில் எம்பெருமானை நினைத்து ஒரு நுனியில் கட்டி மரத்தின் அடியில் மஞ்சள், குங்குமம் பூசி, நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் அருள்கிட்டும். இது மகான்கள் கண்ட உண்மை. தெய்வாம்சம் பொருந்திய மரம் கோவில் கிரி பிரதட்சிணத்தில் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது.

 இங்கு காது குத்தல், மொட்டை அடித்தல், கல்யாணம், துலாபாரம், விசஷே அபிஷேக ஆராதனைகள் எனப் பக்தர்கள் பல்வேறு பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.

🍎 ஜாபாலி மகரிஷி நரசிம்மரின் தரிசனம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பிரதோஷ வேளையில் மகரிஷிக்கு தரிசனம் தந்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கிற 

🍎 மலையை சுற்றி வருபோது மேலே ஒரு பலிபீடம் அமைந்துள்ளது அங்கே இருந்து பார்த்தல் கோவிலின் கொடிமரம் மலைகளின் பினனணியில் அழகாக காட்சி தருகிறது

🌹 மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது. எனபது சிறப்பம்சம்.பின் நாம் படி இறங்கி வரும்போது நேரே இலட்சுமி நரசிம்மர் வீற்று இருக்கிறார்

🌹 மலையை விட்டு கீழே  இறங்கி வரும் பாதை

 இறைவனின் இடது தொடையில்  அமர்ந்து இருக்கிற லட்சுமி தேவியின் இடது கையில் தாமரையும் வலக்கை நரசிம்மரின் இடுப்பை சுற்றிய நிலையில் காணபடுகிறது  நரசிம்மரின் பின்கைகள் சங்கு சக்கரம் ஏந்த வலமுன் கை காக்கும் குறிப்பில் உள்ளது இட முன்கை இறைவியை அணைத்தவாறே காணப்படுகிறது

🍒 அவரை வழிபாட்டு மலைசுற்றை முடித்து கீழே வரும்போது ஒரு மண்டபம் காணப்படுகிறது

 அதில் அன்னதானம் தினமும் நடைபெறுகிறது நாங்கள் செல்லும் போது அன்னதானம்  நடைபெற்று கொண்டிருந்தது . ஒரு கட்டு கட்டியாச்சு. எங்க போனாலும் நம்ம காரியத்துல கண்ணாயிருப்போமில்ல!! கோவிலை விட்டு வெளியே வரும்போது கோவிலின் வெளியே ஒரு நாற்கால் மண்டபம் காணப்படுகிறது அதுபற்றிய தகவல்களை பெறமுடியவில்லை

இத் திருக்கோவில் காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

🍎 கோவிலின் வெளிப்புறம் பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைகின்றன நாங்களும் நல்லபடியாக நரசிம்மரை தரிசித்து அவரின் அருளை பெற்று வந்து  உங்களுக்கும் பகிர்ந்து விட்டேன் இந்த தலத்தை சுற்றி  இன்னும் இரண்டு, மூன்று  அழகிய கோவில்கள் இருக்கிறது

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

No comments:

Post a Comment